நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலாவும், நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 படமும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே நேரத்தில் தங்களது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து, அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இருவரது படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஸ்வரூபடம் 2 படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இதனால், இந்த படமும் வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதியே ரிலீஸ் செய்ய கமல் தரப்பு திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, ரசிகர்களுக்கிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.