கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ எம்ஜிஆருக்கு ஹீரோயின் யார் தெரியுமா ?

Feb 26, 2018, 12:01 PM IST
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அனிமேஷன் படமான ''கிழக்கு ஆப்பரிக்காவில் ராஜூ'' திரைப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் யார் என்பது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோதே திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், அவர் அரசியலில் இறங்கி வெற்றிப்பெற்று முதல்வர் ஆனதால் அதன் பிறகு இந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.
இந்நிலையில், எம்ஜிஆர் உருவத்தில் முழுக்க 3டி அனிமேஷன் படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு, கிழக்கு ஆப்பரிக்காவில் ராஜூ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக யார் நடிக்க போவது என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடையே எழுந்தது. இந்நிலையில், எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்பட பல பழம்பெரும் நடிகர்கள் அனிமேஷனில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த படம் எம்ஜிஆர் பிறந்த நாளன்று வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You'r reading கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ எம்ஜிஆருக்கு ஹீரோயின் யார் தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை