சல்மான் கான் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் `பஜரங்கி பைஜன்’. இந்தியில் வெளியான இப்படம் இந்தியாவின் பட்டித் தொட்டி எங்கும் வசூல் மழையை வாரிக் குவித்தது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் சீனாவில் தற்போது வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு அமீர் கானின் `டங்கல்’ மற்றும் இந்த ஆண்டு வெளியான `சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ போன்ற திரைப்படங்கள் சீனாவில் பல நூறு கோடிகளை வசூல் செய்தன. குறிப்பாக `டங்கல்’ படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த நாட்டுத் திரைப்படமும் செய்யாத சாதனையைச் புரிந்தது.
இந்நிலையில்தான் சல்மான் கானின் `பஜரங்கி பைஜன்’ சீனாவில் வெளியாகத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படமும் சீன மக்களுக்கு பிடிக்கும் என்று கணிக்கப்படுவதால், `டங்கல்’ வசூல் சாதனை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் திரைப்படங்களுக்கு, சொந்த நாட்டினர் இல்லாத இடத்திலும் சந்தை வளர்ந்து வருவதை இந்த சமீபத்திய ஹிட் திரைப்படங்கள் பறைசாற்றுகின்றன.