“விஸ்வரூபம் 2” டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Mar 3, 2018, 20:42 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து பல்வேறு தடைகளை தாண்டி ரிலீசான படம் விஸ்வரூபம். இந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்ததை அடுத்து, விஸ்வரூபம் 2 எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்புகள் முடிந்த நிலையிலும் பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், விஸ்வரூபம் 2 விரைவில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், காலாவிற்கு போட்டியாக ஏப்ரல் 27ம் தேதி அன்றே விஸ்வரூபம் 2 படம் ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தை இயக்கி, தயாரித்து, நடித்துள்ள கமல்ஹாசனுடன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

You'r reading “விஸ்வரூபம் 2” டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை