2.0 மேக்கிங் வீடியோ ரிலீஸ்.. இயக்குனர் சங்கர் வெளியிட்டார் (வீடியோ)

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் சங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் படம் 2.0. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

2.0ன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தப் படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, நேற்று 2.0 படத்தின் டீசர் திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் ரிலீசாக படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் குறித்த மேக்கிங் வீடியோவை இயக்குனர் ஷங்கர் இன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் 2.0 படம் உருவாகிய விதம் குறித்து நடிகர் அக்ஷய் குமார், இயக்குனர் சங்கர், வி.எப்.எக்ஸ் சூப்பர் வைசர் ஸ்ரீனிவாஸ் மோகன், வி.எப்.எக்ஸ் தலைவர் ரிப் தாகர், வி.எப்.எக்ஸ் சூப்பர்வைசர் வால்ட் ஜோன்ஸ் (டால் பில்ம்ஸ்) ஆகியோர் பேசி உள்ளனர்.

2.0 டீசர் லீக் ஆனதை தொடர்ந்து, மேக்கிங் வீடியோவை அதிகாரப்பூர்வமாக இயக்குனர் சங்கர் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds