தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவால் தற்போது தமிழில் ஹிட் அடித்தப் படங்கள் மீண்டும் இன்று முதல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
க்யூப், யூ.எ.ஏ ஆகியவற்றின் கட்டணங்களைக் குறைக்க வேண்டி தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1-ம் தேதி முதல் புதுப்படங்கள் ஏதும் ரிலீஸ் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்கம் பக்கம் மக்கள் சுவடே இல்லாமல் போனது. இதையடுத்து தற்போது தமிழில் ஹிட் அடித்த முக்கியப் படங்களை ரீ-ரிலீஸுக்குத் தயார் செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர் நடித்த ஹிட் படங்களான 'எங்கள் வீட்டுப் பிள்ளை', 'நினைத்தை முடிப்பவன்', ரஜினிகாந்தின் 'பாட்ஷா', அஜித்தின் 'வேதாளம்', 'விவேகம்', 'வீரம்', நடிகர் விஜயின் 'தெறி', 'மெர்சல்', சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்', விஜய் சேதுபதியின் 'கருப்பன்', 'விக்ரம் வேதா', 'பாகுபலி', 'தரமணி'ஆகிய திரைப்படங்கள் இன்று தமிழகம் முழுவதும் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது.
திரைப்படங்கள் ஏதும் வெளியாகததால் திரையரங்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் இருந்தது. இதை சமாளிக்கவே தற்போது ஹிட் அடித்தப் பல படங்களும் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது.