இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் ‘வெண்ணிலா கபடிகுழு’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர் சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
தற்போது சுசீந்திரன் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை. விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார். அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை” என்றார்.
மேலும், துணிவுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்ற கருவை மையமாக வைத்து இந்த கதை பின்னப்பட்டுள்ளது. காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கதையாக இது உருவாகி இருக்கிறது. விக்ராந்த் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நிச்சயம் ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.