கமலின் பிக்பாஸ் 4ல் பிகில் நடிகை பெயர்.. யார் என்னை பட்டியலில் சேர்த்தது என சிணுங்கும் நடிகை..

by Chandru, Sep 6, 2020, 18:52 PM IST

விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான புரமோஷனை கமல்ஹாசனும் வேகமாக செய்து வருகிறார்.
சமீபத்தில் நலமா என்ற விசாரிப்புடன் புரமோ வீடியோவில் தோன்றிய கமல் தற்போது தப்புன்னா தட்டிக் கேப்பேன் நல்லதுன்ன தட்டிக்கொடுப்பேன் என்று அடுத்த வீடியோவில் உரிமைக்குரல் எழுப்பி வரும் பிக்பாஸ் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு முனோட்டாமாக சிக்னல் கொடுத்திருந்தார்.


ஆனால் பிக்பாஸ் தொடங்கும் நாள் எபோது, யாரரெல்லாம பங்கேற்கப் போகிறார்கள் என்ற பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாவிட்டலும் இவர்கள் பங்கேற்க பேச்சு நடப்பதாக அவ்வப்போது தகவல் வருகிறது. அப்படி வந்த லிஸ்ட்டில் ஏற்கனவே 'இஸ்பேட் ராஜாவாவும் இதய ராணியும்' பட நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகை ரம்யா பாண்டியன், அமுதவாணன், சூர்யாதேவி போன்றவர்கள் பெயர்கள் வெளியாகின. இந்நிலையில் 'பிகில்' பட நடிகை பெயரும் அதில் சேர்ந்திருக்கிறது.
தென்றல் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்திருந்தவர் அம்ரிதா ஐயர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இப்படி வரும் செய்திகள் பற்றி அம்ரிதா காதில் விழுந்தது. உடனே அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொத்தாம்பொதுவாக பிக் பாஸ் பட்டிலில் என்னை சேர்த்தது யார் என்று கேட்டு ஒரு அழகு காட்டுவது போல் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அது லைக்கை அள்ளி வருகிறது.


More Bigg boss News

அதிகம் படித்தவை