விஜய் சேதுபதி வெளியேறிய பிரபல ஹீரோ படத்தில் வேறு நடிகர் ஒப்பந்தம்.. வில்லன் வேடத்தில் நடிக்கிறார்..

by Chandru, Sep 6, 2020, 18:40 PM IST

விஜய் சேதுபதி பல படங்களில் ஹீரோவாக நடிக்கிறார், தற்போது ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் ஹீரோ வட்டத்தை விட்டு அவ்வப்போது வெளியில் வந்து வில்லன் வேடமும் ஏற்கிறார். அதுவும் பெரிய நடிகருக்கு வில்லனாக நடித்தால் தந்து ஹீரோ இமேஜ் பாதிக்கும் ரசிகர்களிடம் ஏச்சு வாங்க வேண்டிவரும் என்ற எண்ணமெல்லாம் இவருக்கு கிடையாது. ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த விஜய் சேதுபதி அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் திறக்காத நிலையில் இப்படம் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கிறது.


தமிழ், தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படம் 'புஷ்பா'. இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று கால்ஷீட் பிரச்னையை காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். விஜய் சேதுபதி விலகியதையடுத்து அந்த வாய்ப்பு நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சென்றுள்ளது. இவரும் வில்லன் ஹீரோ என்று மாறி மாறி படங்களில் நடிக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை