கோலிவுட்டில் வலம் வரும் புது நட்சத்திர காதல் ஜோடி.. கொரோனா போனதும் கிளிகள் ஒன்றாய் பறந்தது..

by Chandru, Sep 6, 2020, 18:26 PM IST

கோலிவுட் அடிக்கடி நட்சத்திர காதல் ஜோடிகளை சந்தித்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி குடும்பத்தினர் சம்மத்ததுடன் ஊர் ஊராக மட்டுமல்ல நாடுவிட்டு நாடு பறந்துக் கொண்டிருக்கிறது. திருமணம் பற்றி கேட்டால் இன்னும் கொஞ்ச நாள் காதலித்துவிட்டு காதல் போர் அடிக்கும் போது திருமணம் செய்து கொள்வோம் என்கிறார் விக்னேஷ் சிவன். தற்போது கோலிவுடில் மற்றொரு புதிய காதல் ஜோடி வலம் வரத் தொடங்கி உள்ளது.

டார்லிங், சார்ளி சாப்லின்2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணிக்கும் ஒரு ரகசிய காதலன் இருக்கிறார். யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய 2 படங்களில் ஆதியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் நிக்கி கல்ராணி. இந்த ஜோடிதான் தற்போது கோலிவுட்டின் புது காதல் கிளிகளாக சிறகு விரித்திருக்கின்றன
சில வாரங்களக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பெற்று வந்தார் நிக்கி கல்ராணி. சமீபத்தில் குணம் அடைந்தார். ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் 5 மாதமாக போராடித்தது கூடவே கொரோனா தொற்று என அவஸ்த்தைப்பட்டார். தொற்று குணம் ஆனவுடன் தற்போது ஆதியுடன் ஜோடி போட்டுக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்டார்.
கொரோனா தொற்று ஊராடங்கு முடிவுக்கு வந்த நிலையில் ஆதியும், நிக்கியும் பெட்டி கட்டிக்கொண்டு ஐதராபாத் விமான நிலையத்தில் ஜோடி போடு நடந்து சென்ற படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடி இன்னும் எத்தனை வருடம் காதலிக்கும் என்பதை பொருத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.


More Cinema News

அதிகம் படித்தவை