மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம்

Mar 16, 2018, 23:07 PM IST

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அணைத்து மொழிகளிலும் தனது நடிப்பால் பெயர் பெற்றவர் நடிகை ஸ்ரீ வித்யா. 1966 முதல் 2000 ஆண்டு வரை 34 ஆண்டுகள் இந்திய திரை துறையில் பிரபலமாக இருந்து வந்தார்.

2006 ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். கேரள நடிகர் மற்றும் எம்.எல்.ஏ பதவியும் வகுத்து வந்த கணேஷ்குமார் அவரின் கடைசி காலத்தில் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,சென்னை அபிராமபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீ வித்யாவுக்கு ஒரு வீடு இருப்பதாகவும் அது தற்போது நடன பயிற்சி மையமாக செயல் பட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் வரும் வாடகை பணம் வருமான வரி பாக்கியின் ஒரு தவணைகளாக கருதப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் வாடகை பணம் எதிர்பார்த்தபடி இல்லாததால் நடிகை ஸ்ரீ வித்யாவின் வீட்டினை விற்று பணத்தை செட்டில் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

1250 ச.து.அடி கொண்ட அதே வீடு தற்போதைய மதிப்பு. சுமார். 1 கோடியே 17 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது என வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு ஏலம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை