நான் போடும் டிரஸ்சுக்காக யாருக்கும் டென்ஷன் வேண்டாம் இளம் நடிகை அதிரடி

by Nishanth, Sep 14, 2020, 15:56 PM IST

நான் கவர்ச்சியாக அணியும் ஆடைகளை பார்த்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று மலையாள இளம் நடிகை அனஷ்வரா ராஜன் கூறியுள்ளார்.
மலையாளத்தில் 'உதாகரணம் சுஜாதா' என்ற படத்தில் நடிகை மஞ்சுவாரியரின் மகளாக அறிமுகமானவர் அனஷ்வரா ராஜன். இதன் பின்னர் இவர் 'தண்ணீர் மத்தன் தினங்கள்', 'ஆத்ய ராத்திரி' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இந்நிலையில் இவர் தமிழிலும் விரைவில் அறிமுகமாக உள்ளார். திரிஷா நடிக்கும் 'ராங்கி' படத்தில் இவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தனது 18வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாடிய ஒரு சில நாட்களிலேயே இவர் தனது இன்ஸ்டாகிராமில் சில கவர்ச்சி படங்களை வெளியிட்டார்.
குட்டி டிரவுசருடன் கழுத்துக்குக் கீழே இரண்டு கைகளின் மேல் பகுதியும் தெரியும் அளவுக்கு மேலாடையும் அணிந்திருந்தார். இந்தப் படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே ஏராளமானோர் ஆபாச கருத்துக்களுடன் அனஷ்வராவுக்கு கண்டனமும் தெரிவித்திருந்தனர். 'கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுக்க 18 வயது ஆவதற்கு காத்திருந்தாயா? உனக்கு வெட்கமாக இல்லையா? இதே மாதிரி இன்னும் நிறைய படங்களை பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்'..... இப்படிப் போகிறது கமெண்டுகள்.


ஆனால் அனஷ்வராவுக்கு ஆதரவு தெரிவித்தும் பலர் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். 'ஒருவர் என்ன டிரஸ் போட வேண்டும் என தீர்மானிப்பது அவரவர் உரிமை, அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை' என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு எதிராக ஆபாச கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு பதிலடியாக இன்று அனஷ்வரா அதே மாடலில் வேறு கலரில் டிரெஸ் அணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் போடும் டிரஸ் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை, என்னை பார்த்து உங்களுக்கு ஏன் பதற்றம் வருகிறது என்பதை நினைத்து நீங்கள் கவலைப்படுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


More Cinema News

அதிகம் படித்தவை