கர்ம பலன் நிச்சயம் இங்கு உண்டு வைரலாகும் நடிகை பாவனாவின் கருத்து

by Nishanth, Sep 18, 2020, 16:30 PM IST

கர்ம பலன் என்பது நிச்சயம் இங்கு உண்டு என்று கர்மா குறித்து பிரபல நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.மலையாள சினிமாவில் கடந்த 2002-ல் 'நம்மள்' என்ற படத்தில் அறிமுகமானவர் பாவனா. இதன் பின்னர் இவர் 'சிஐடி மூசா', 'குரோனிக் பேச்சுலர்', 'இவர்', 'அம்ருதம்' உள்பட 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் 'சித்திரம் பேசுதடி' என்ற படத்தில் அறிமுகமானார்.

இதன்பின் 'கிழக்கு கடற்கரைச் சாலை', 'வெயில்', 'தீபாவளி', 'கூடல்நகர்' உட்படப் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளரான நவீன் என்பவரைக் கடந்த 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்தார். மலையாளத்தில் இவருக்கு தற்போது வாய்ப்பு குறைந்த போதிலும் கன்னட சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிய '96'ல் திரிஷாவின் கேரக்டரில் கன்னடத்தில் இவர் தான் நடித்திருந்தார். இந்தப் படம் கன்னடத்தில் '99' என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: 'மற்றொருவருக்கு நீங்கள் செய்யும் தீங்கின் விளைவு என்ன என்பது அது உங்களுக்குச் சம்பவிக்கும் வரை ஒருபோதும் புரியாது. அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன்- கர்மா என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பாவனாவின் இந்த திடீர் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் எதற்காக திடீரென இப்போது 'கர்மா' குறித்த இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறித்துத் தான் அனைவரும் விவாதித்து வருகின்றனர். நடிகை பாவனாவின் இந்த கருத்துக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இவர் கன்னடத்தில் 'ஸ்ரீ கிருஷ்ணா அட் ஜிமெயில் டாட் காம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News