அனுஷ்காவின் கைவசத்தில் இருக்கும் இரண்டு புதிய படங்கள்

by Logeswari, Sep 30, 2020, 16:02 PM IST

தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுஷ்கா.அதுவும் பாகுபலியில் அனுஷ்கா தனது நடிப்பு திறமையை மேன்மை படுத்தி காட்டியிருப்பார்.பாகுபாலி திரைப்படம் வெளிவரும் பொழுது பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் காதல் கெமிஸ்டரியை பார்த்து இருவரும் காதலிகின்றனர் என்று புரளி கிளம்பியது.ஆனால் அனுஷ்கா அப்படி ஏதும் இல்லை என்று சொல்லி புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


இந்நிலையில் கொரோனா நோய் தொற்று அதிகமானதால் அரசாங்கம் ஊரடங்கு தடைவிதித்தது.இதனை அனுஷ்கா பயன்படுத்து தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ததாகவும்,பாக்காத திரைப்படங்களை கண்டு களித்ததாகவும் கூறியுள்ளார்.பாகுபலி,பாகமதி ஆகிய திரைப்படத்திற்கு பிறகு 'சைலன்ஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.இது ஒடிடி தளத்தில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரஉள்ளது.இந்த ஊரடங்கில் இயக்குனர்களிடம் கதைகளையும் கேட்டு வந்துள்ளார்.அதலில் 2 கதைகளுக்கு நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இரண்டு படங்களும் எந்த மொழியை சார்ந்தது குறித்த தகவல்களை அனுஷ்கா வெளியிடவில்லை.ரசிகர்கள் அனுஷ்காவிற்கு அடுத்து திருமணம் என்று நினைத்து இருந்தனர்.ஆனால் இந்த செய்தி ரசிகர்களின் கனவை கலைத்துள்ளது என்றே கூறலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை