கிராம சபை கூட்டங்களில் காணொளி மூலம் பங்கேற்க கமல்ஹாசன் முடிவு..!

by Balaji, Sep 30, 2020, 17:53 PM IST

தமிழ்நாடு முழுக்க ஆயிரத்து 500 கிராமங்களில் காணொளி முறையில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். கிராமசபை குறித்த விழிப்புணர்வையும் கட்சியினர் மூலம் ஏற்படுத்தி வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாகக் நடத்தப்படாத கிராமசபைக் கூட்டங்கள் வரும் அக்டோபர் 2இல் காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட இருக்கின்றன. இந்த கூட்டங்களில் காணொளி மூலம் கலந்து கொள்ளக் கமலஹாசன் முடிவு செய்துள்ளார். இதன்படி சுமார் ஆயிரத்து 500 கிராம சபைக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தொண்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் :-கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மே 1, ஆகஸ்டு 15 ஆகிய 2 முறையும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதனால் பல கிராம வளர்ச்சிப் பணிகள், அவற்றுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் தடைப்பட்டுள்ளது. .எனவே, வரும் அக்டோபர் 2-ந் தேதி 4 பேர் கொண்ட அணியாகக் கிராமங்களுக்குச் சென்று கிராம முக்கியஸ்தர்களைச் சந்தித்து, கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் காணொளி முறையில் இணைக்க வேண்டும். நாமே தீர்வு: கிராமங்கள் இணைப்பு என்ற இந்த நடவடிக்கையை முதல் படியாக 1,500 கிராமங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாகக் கிராமத்து இளைஞர்களைக் காணொளி முறையில் தலைவர் கமல்ஹாசனுடன் இணைத்து, அவர்கள் கிராம வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதே இதன் நோக்கம். இதில், கிராம வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துரைக்க பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கலும் இதில் பங்கேற்க உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை