காஞ்சனா திரைப்படம் இந்தியில் வெளியீடு திருநங்கையாக மாறிய இந்தி நடிகர் அக்‌ஷய் குமார்

by Logeswari, Oct 1, 2020, 18:18 PM IST

ராகவா லாரன்ஸ் இயக்கி மற்றும் நடிக்கின்ற திரைப்படத்தில் உண்மையை எதார்த்தமாக கூறியிருப்பார்.அவரது படத்தில் குழந்தைகளை கவரும் விதத்தில் காமெடிகளை இணைத்துருப்பார். இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சனா திரைப்படம் செம ஹிட்டாக திரையரங்குகளில் ஓடியது.இதில் திருநங்கைகள் அடையும் பிரச்சனைகளை எடுத்து கூறியுள்ளனர்.தமிழில் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து இத்திரைப்படத்தை இந்தியில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் இப்படத்திற்கு லக்‌ஷ்மி பாம் என்ற பெயரை சூட்டியுள்ளனர்.தமிழில் காஞ்சனா திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த சரத்குமாருக்கு இக்கதாபாத்திரம் இனிதே பொருந்தியதோடு மக்களால் நல்ல வரவேற்பை பெற்றது.இந்தியில் திருநங்கை கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் முடங்கியுள்ளதால் அரசாங்கம் திரையரங்குகளை திறக்க தடை விதித்துள்ளது.இதனால் லக்‌ஷ்மி பாம் ஓடிடி தளத்தில் வருகின்ற நவம்பர் தேதி ரீலிஸ் ஆகிறது.இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தியேட்டரில் லக்‌ஷ்மி பாம்நவம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Get your business listed on our directory >>More Cinema News