கடந்த 3 வருடமாக உலக நாயகன் கமல் ஹாசன் விஜய் டிவியில் நடத்தி வரும் பிக்பாஸ் ஷோவை ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் பலரின் சுய ரூபத்தை வெளிக்காட்டும் கண்ணாடியாக திகழ்கிறது. இதில் அரசியல் அவலங்களையும் கமல் அரங்கேற்றி ஒரே நேரத்தில் உலக அரங்கில் அரசியல் தகிடு தத்தங்களை அம்பலமாக்கி வருகிறார். இந்த முறை நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
பிக்பாஸ் போடியாளர்களில் ஒருவராக இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருக்கிறார் இளம் நடிகர் ரியோ ராஜ். இவரை டிவியிலே பார்த்திருக்கீங்க, சினிமாவில் பார்த்திருக்கீங்க, பிக்பாஸ் வீட்டுக்குள்ள முதன்முறையாக ரசிகர்கள் மட்டுமல்ல சரவணன் மீனாட்சி டிவி தொடரில் நடித்து அதன் மூலம் திரட்டி வைத்திருக்கும் ரசிகை களும் பார்க்கப்போகிறார்கள்.
ரியோ ராஜ் ரொம்ப நல்லவர், எந்த வேலையாக இருந்தாலும் அதை செய்து முடிக்க வேண்டும் என்ற பாலிசி கொண்டவர். இந்த நல்லத்தனமெல் லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன ஆகப் போகிறது என்பதை தினம் தினம் வெட்ட வெளிச்சம் ஆகப்போகிறது. இவர் சாதுவாகத்தான் இருப்பார் ஆனால் யாராவது சீண்டினால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற அளவுக்கு பதிலடி தரப் போகிறார் என்பதெல்லாம இப்போதைக்கு சஸ்பென்ஸ்.
சரி, ரியா ராஜ் யார்? எந்த ஊரு? என்று கேட்பது தெரிகிறது.
ஈரோட்டை சேர்ந்தவர் ரியே ராஜ். அவரது பள்ளி பருவம், கல்லூரி பருவம் போன்ற பசுமை நினைவுகள் எல்லாமே ஈரோட்டில்தான் சுழன்று சழன்று வந்தது. படிப்பு முடித்து சென்னை வந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பொழுது போக்கு துறையில் தான் கால் பதிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அதை நோக்கியே தனது பயணத்தை அமைத்தார். இதற்கிடையில் ஸ்ருதி என்பவரை மணந்தார்.
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ரியோ பல சிறப்பு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தினர். சுடசுட சென்னை, கல்லூரி காலம், காபி டீ ஏரியா போன்றவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொகுப்பாளராக இருந்தவருக்கு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுயாருப்பா இப்படி நடிக்கிறாரு என்று முதல் எபிசோடிலேயே பேச வைத்ததுடன் அனைவரின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டார்.
சகஜமாக எல்லோரிடமும் பழகும் எளிமையான மனுஷன் என்ற பெயரை சீக்கிரமே பெற்றார் ரியோ. அது அவரை சினிமா துறைக்கும் கொண்டு சென்றது. உழைத்து முன்னேறிய எல்லோருமே அவருக்கு முன்னுதாரணம். டிவியில் தோன்றி இன்று சினிமாவில் வெற்றிகர மான ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், வெற்றிகரமான காமெடியன், குணசித்ர நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் வரை ரியோவின் வாழ்க்கைக்கு முன்னுதாரணம்தான்.
சினிமாவில் போட்டி அதிகம் அதை விட பொறமை அதிகம் நட்பால் பழகுவார்கள் ஆனால் தன்னைப்போல் உயர வேண்டும் என்று கைதுக்கி விடமாட்டார்கள். அதில் சிலர் விதிவிலக்கான ஹீரோக்களும் இருக்கி றார்கள். ரியோ ராஜ் திறமை, உழைப்பு மீது நம்பிக்கை வைத்து அவரை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப் படுத்தினார் சிவகார்த்திகேயன்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தி சொந்தமாக தயாரித்து அதில் ரியோ ராஜ்-ஐ ஹீரோவாக்கினார். படம் ஹிட்டாக அமைந்தது. கார்த்திக் வெங்கடேசன் இயக்கினார். அடுத்து பிளான் பண்ணி பண்ணனும்; என்ற படத்தில் நடிக்கிறார் ரியோ. இதன் ரிலீஸ் தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு, காதல் ஒன்று கண்டேன் என்ற குறும்படத்தில் நடித்தார் ரியோ. டிவியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி (3ம் பாகம்), மற்றும் ஜோடி நம்பர் 1, போன்ற சீரியல்கள் டிவி ஷோக்களில் ரியோ ராஜ் முத்திரை பதித்தார்.
பிக்பாஸ் ஷோவில் இவரது நடவடிக்கைகளை ரசிகர்கள் உற்று நோக்குவார்கள். கொஞ்சம் பிசகினாலும் வாங்கி வைத்திருக்கும் நல்ல பெயரெல்லாம் திசை மாறிவிடும். பிக்பாஸ் இல்லம் என்பது நாம் தினமும் புழங்கும் நம் வீடு இல்லை. இங்கு போட்டியாளர்களாக வருபவர்கள் எந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள், எப்படி பேசுவார்கள் என்பதெல்லாம் தெரி யாது. ரியோ ராஜை பொருத்தவரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்றிருப்பாரா? பூனையாகவே இருந்தாலும் எதிர்ப்பு என்று வந்தால் புலிபோல் பாய்வாயாரா என்பது சூழ்நிலையை பொறுத்து மாறும் என்பதில் சந்தேகமில்லை. என்ன நடத்தாலும் வெற்றி போட்டி யாளராக ரியோ ராஜ் திரும்பிவர தி சப் எடிட்டர் டாட் காம் வாழ்த்துக்கள்.