“குறைந்த படங்கள்..ஆனால் ஏகப்பட்ட விருதுகள்” - பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொள்ளும் ஆரி அர்ஜூன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!

Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ் 4 போட்டிக் கான அறிமுக நாள் இன்று (அக்டோபர் 4). யார், யார் வீட்டுக்குள் செல்லவிருக் கிறார்கள் என்பது இன்று மாலை தெரிந்துவிடும் இதுவரை யாரெல்லாம் போட்டியில் பங்கேற்பார்கள் என்று கசிந்த விவரங்கள்தான் நெட்டில் வலம் வந்துக்கொண்டிருந்தது. அந்த வரிசை யில் நடிகரும் நெடுஞ்சாலை ஹீரோவு மான ஆரி பெயரும் இடம் பெற்றிருந்தது.


ஆரி நெடுஞ்சாலை படத்தில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதற்கு முன்பே சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமா னார். இப்படம் திரைப்பட விழாக் களில் கலந்துகொண்டு பாராட்டு பெற் றது. இதையடுத்து தமிழ் சினிமாவின் லெஜெண்ட்- சாதனையாளர்கள் இணைந்து வழங்கிய படத்தில் நடித்தி ருந்தார். இயக்குனர் சிகரம் கே.பால சந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்டை சுழி என்ற படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். அதில் ஹீரோவாக அறிமுகமானார் ஆரி. இப்படத்தை தாமிரா இயக்கி இருந்தார். ஹீரோயி னாக அஞ்சலி நடித்தார். இப்படம் வெளியாகி பெரிய அளவில் யாருக்கும் கைகொடுக்கவில்லை. விமர்சனங் களிலும் பெரிதாக பாராட்டு பெற வில்லை. பின்னர் நெடுஞ் சாலை படத் தில் தார் பாய் முருகன் என்ற கதாபாத் திரத்தில் நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஆரிக்குள் இவ்வளவு திறமையா என்று கோலிவுட் வியந்தது.


ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறும் திறமை ஆரிக்கு வந்தது எப்படி என்று பார்த்தால் அவரது பின்புலம் மிகவும் உறுதியானதாக அமைக்கப்பட்டதுதான் காரணம். இவர் நாடக பின்னணியில் வந்தவர். அதுதான் இவரது நடிப்பு திறமைக்கு முக்கிய காரணம். பல நடிகர் களுக்கு இவர் உடற்பயிற்சி மாஸ்டராக வும் இருந்திருக்கிறார்.


மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஆரி. இதில் முன்னதாக அதித் அருன் நடிப்ப தாக இருந்தது. இப்படத்தின் கதாபாத் திரம் உண்மையிலேயே சவாலானது என ஆரி குறிப்பிட்டிருந்தார். 2012ம் ஆண்டு படம் திரைக்கு வந்தது .அதன் பிறகுதான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஆரிக்கு திருப்புமுனை படமாக நெடுஞ் சாலை வந்தது. இந்த படத்தில் நடிப்ப தற்காக தனது உடல் எடையில் நிறைய கிலோக்களை கூட்டினார். அதற்காக அவர் இரண்டு வருடம் செலவழித்தார். அடுத்து கதை எண் 6 என்ற படத்தில் நடித்தார். இதற்காக உடல் எடையில் 14 கிலோ குறைத்தார். பிறகு அமானுஷ்ய கதையான மாயா படத்தில் நயன்தாரா வுடன் நடித்தார். பிறகு தரணி என்ற படத்தில் நடித்தார். மேலும் உன்னோடு கா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங் கம், போன்ன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான், அலெக்கா உள்ளிட்ட 3 படங்களி நடித்து வருகிறார்.


நதியா என்பவரை ஆரி மணந்தார். இவர் லண்டனை சேர்ந்த இலங்கை பெண். சென்னை காளிகாம்பாள் கோயிலில் இவர்கள் திருமணம் கடந்த 2015ம் ஆண்டு நடந்தது. முன்னதாக நிச்சய தார்த்தம், திருமண வரவேற்பு தாஜ் கன்னிமாரா நடசத்திர ஓட்டலில் நடந்தது
ஆரி நடித்த படங்கள் என்னவோ குறைவுதான் ஆனால் விருதுகள் அவரது வீட்டு செல்ப்பை நிறைத்துவிட்டது. ஏனென்றால் இவர் வெறும் நடிப்போடு தன்னை நிறுத்திவிடவில்லை அதையும் தாண் டி சமுதாய அக்கறையுடன் பல பணிகளை செய்து வருகிறார். கையெழுத்து இயக்கம் நடத்தியும், 3000 மாணவர்களை வைத்து விதைகள் நட்டும் சாதனை படைத்தார். இதற்காக இவர் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். தவிர நெடுஞ்சாலை படத்துக் காக சிறந்த நடிகருக்க்கான வி4 விருது மற்றும் சினிமா ரசிகர்கள் சங்க விருதும் பெற்றார்.


ஆரி நடிகராக இருந்தாலும் வந்த படங் களையெல்லாம் வாங்கிப் போட்டு கல்லாவை நிரப்புபவர் இல்லை. கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். பிக்பாஸ்4ல் பிக்பாஸ் இல்லத்துக்குள் இவரது பிரவேசம் என்பது சற்று வித்தியாச மாகவே இருக்கும். போட்டியில் ஜெயிப்பது அல்லது தோற்பது இவரது குறிக்கோளாக இருக்காது. ஆனால் அங்கு தனது உறுதித் தன்மையை எப்போதும் விட்டுகொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. நக்கல் நய்யாண்டி, சீண்டல், தீண்டல் எல்லாம் இவரிடம் யாரும் செய்யமாட்டார்கள். இவரை கண்டதும் மற்ற போட்டியாளர் கள் சற்று தூராமாகவே நிற்கக்கூடும். எல்லோருக்கும் ஒரு மாஸ்டராக கூட மாற வாய்ப்பிருக்கிறது. ஆரம்ப நாட் களில் தனது பெயரை ஆரி என்று பயன் படுத்தி வந்தவர் பிறகு ஆரி அருஜூனா என மாற்றிக்கொண்டார். ஆரி வெற்றிக்கு தி சப் எடிட்டர் டாட் காம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>