கடற்கரையில் வனிதா அடிச்ச லூட்டிய பாருங்க!! சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்..

by Logeswari, Oct 8, 2020, 14:02 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை ஏதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சையில் பிரபலமாகியவர் வனிதா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை காண்பித்து போட்டியில் வெற்றி பெற்றார்.கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் யுட்யூப் பக்கத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை தேர்வு செய்து சமையல் வீடியோக்களை பதிவுசெய்து வந்தார்.இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பல எதிர்ப்புகளையும் மீறி, பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார்.இதனால் பல வித விமர்சனங்களை தற்பொழுதும் சந்தித்து வருகிறார். ஆனால் அவர் எதையும் பொருட்படுத்தாமல் புது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வனிதா அவரது கணவனுடன் கடற்கரையில் ஒட்டி உரசி எடுத்து கொண்ட புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது. வழக்கம் போல் சிலர் இதைப் பார்த்து முகம் சுளித்து, வயசு பொண்ணுகளை பக்கத்தில் வைத்து கொண்டு இப்படி செய்யலாமா? என்று பலரும் வனிதாவை திட்டி வருகின்றனர்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Cinema News