பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ என்ட்ரி கொடுத்த மீனா.. சந்தோஷத்தில் ரசிகர்கள்...

Meena re-enters Pandian Stores Happy fans ...

by Logeswari, Oct 9, 2020, 21:47 PM IST

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாகவும், நம்பர் 1 ஆகவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.இது கூட்டுக் குடும்ப கதைக்களத்தைக் கொண்டுள்ளதால் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறது.இதில் முக்கிய கதாபாத்திரமான முல்லை - கதிர் என்ற ஜோடிகளுக்குப் பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கின்றன.இதை அடுத்து மீனா- ஜீவா என்ற ஜோடி மக்களை மிகவும் கவர்ந்துள்ளனர்.

மீனா என்பவர் சீரியலில் கர்ப்பம் ஆனவராக நடிக்க வேண்டும் என்கின்ற சூழல் ஏற்பட்டது.ஆனால் கடவுளின் அருளால் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பம் தரித்தார்.இதலிருந்து தான் மீனாவின் நடிப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறலாம்.சீரியலில் சில நாட்களுக்கு முன்பு மீனாவிற்குப் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து மீனாவிற்கு நிஜ வாழ்க்கையில் ஆண் குட்டியான சிங்கக் குட்டியைப் பெற்று எடுத்தார்.

இதனால் மீனா சீரியலில் நடிக்காமல் சற்று ஒதுங்கி இருந்தார்.ஆனால் தற்பொழுது இருக்கும் கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கிறார்கள் அதுபோல மீனாவும் வீட்டில் இருந்தபடியே தனது நடிப்பைத் தொடர்ந்து உள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டதோடு மட்டும் இல்லாமல் 'Work from Home' என்று பதிவிட்டுள்ளார்.தனது பணியைக் காதலிப்பவர்கள் எங்கு இருந்தாலும் வேலை செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் மீனா மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார் என்று உற்சாகத்தில் இருக்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை