மலையாள நடிகர் சங்கம் தயாரிக்கும் படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு இல்லை...!

No chance to Bhavana for malayalam actors associations next film, Idavela babu

by Nishanth, Oct 12, 2020, 18:04 PM IST

'டுவென்டி 20' படத்திற்கு பின் மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்காகத் தயாரிக்கப்படும் படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறியுள்ளார்.மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கடந்த 12 வருடங்களுக்கு முன் டுவென்டி20 என்ற பெயரில் ஒரு படம் தயாரானது.

முன்னணி நடிகர் திலீப் இந்த படத்தைத் தயாரித்தார். டைரக்டர் ஜோஷியின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் மோகன்லால், மம்மூட்டி சுரேஷ் கோபி, ஜெயராம் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும், பாவனா, நயன்தாரா, கோபிகா உள்பட அனைத்து முன்னணி நடிகைகளும் நடித்திருந்தனர்.

₹7 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் 35 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் நடிக்க எந்த நடிகர், நடிகையும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் கொரோனா காரணமாக ஏராளமான நடிகர் நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் அவர்களுக்கு உதவுவதற்காக மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்க மலையாள நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த படத்தை டி.கே. ராஜீவ் குமார் இயக்குவார் எனத் தெரிகிறது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்திலும் மம்மூட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மலையாள நடிகர் சங்க செயலாளரான இடைவேளை பாபு கூறியது: டுவென்டி 20க்கு பின்னர் மலையாள நடிகர் சங்கம் சார்பில் மேலும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள். நடிகை பாவனாவுக்கு அந்த படத்தில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அவர் தற்போது நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் தனது உறுப்பினர் பதவியை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார். உறுப்பினர் இல்லாத ஒருவருக்கு நடிகர் சங்க படத்தில் எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை