பிக்பாஸ் கண்ணாடி சிறைக்கு செல்லும் 2 போட்டியாளர்கள்... கலங்கிய நடிகை..

BigBoss 4 Jithan Ramesh, Shivani in Trap

by Chandru, Oct 16, 2020, 13:07 PM IST

பிக்பாஸ் 4வது சீசன் விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரி, ஜித்தன் ரமேஷ் ரியோ ராஜ், மொட்டை சுரேஷ், ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, அர்ச்சனா போன்ற போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு நாள் நட்பு மறுநாள் மோதல் என்று போட்டியாளர்கள் தினம் , தினமொரு ரகமாக இருக்கின்றனர். மொட்டை சுரேஷ் எல்லோரையையும் பாடாய்ப்படுத்தி வந்தார். அவருக்கு ரியோ ராஜ் மட்டுமே பதிலடி தந்து வந்தார். திடீரென்று வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா மொட்டை சுரேஷை நக்கல், நய்யாண்டி என்று புரட்டி எடுத்தார்.

இவர் சமையல் யாருகெல்லாம் பிடிக்காது, நீங்க ஆங்க்கரா போயிருக்கலாமே. ஐயாவுக்கு திருஷ்டி சுற்று போடுங்க என்று ஓட்டுவோட்டு என்று ஓட்டி துரத்தியே விட்டார். அதற்கு முதல்நாள் சுரேஷுக்கும் ரியோ ராஜுக்கும் நேருக்கு நேர் வாய்த் தகராறு ஆனது. இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ்4 புரோமோவில் ஒரு ஷாக்கான காட்சி அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.எல்லோரும் ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்திருக்க அவர்களுக்கிடையே பேசும் பிக்பாஸ், இந்த வீட்டில் ஆர்வம் குறைவாக இருக்கும் 2 பேரை அனைவரும் சேர்ந்து தேர்வு செய்யலாம் என்று கேட்க அனைவரும் ஜித்தன் ரமேஷ், ஷிவானி பெயரைச் சிபாரிசு செய்கின்றனர்.

அவர்கள் இருவரும் ஷாக் ஆகி எழுகின்றனர். ஷிவானி கலங்கியே விட்டார். ஆனாலும், இருவரையும் அந்த கண்ணாடி அறையில் வைத்துப் பூட்டுங்கள் என்று பிக்பாஸ் சொல்ல இருவரையும் தனித்தனி கண்ணாடி அறையில் வைத்து பூட்டுகிறார் மொட்டை சுரேஷ். அதைக் கண்டு அங்கிருக்கும் பாலாஜி முருகதாஸ், பாவம் அந்த பொண்ணு, அடிக்கடி ஏதாவது சிக்கல்ல கோர்த்து விட்டுட்றாங்க என்று இரக்கப் பட புரோமோ முடிகிறது. கண்ணாடி சிறைக்குள் இருவரும் எத்தனை நாள் இருப்பார்கள் என்பதெல்லாம் இன்று இரவு தெரியவரும்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Bigg boss News

அதிகம் படித்தவை