நடிகை நிக்கி கல்ராணி கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் முடங்கி இருந்தார். திடீரென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த நிலையில் அவர் காதலன் ஆதியுடன் டேட்டிங் புறப்பட்டார். கொரோனா தளர்வில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியும் இன்னும் பட்டபிடிப்பிலிருந்து அழைப்பு வராத நிலையில் செல்லப்பிராணிகளான கிங் காங் மற்றும் சேம்பை என்ற தனது செல்ல நாய்களுடன் பொழுதைக் கழிக்கிறார்.
நிக்கி கல்ராணி விலங்கு உரிமைகளைப் பற்றி அழுத்தமாக பேசுபவர் அதற்காக வாதாடவும் செய்வார். ஏற்கனவே வளர்க்கும் நாய்களுடன் கூடுதலாக 2 நாய்க் குட்டிகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார், செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.இன்ஸ்டாகிராமில் இரண்டு நாய்க்குட்டிகளைக் கட்டிப் பிடித்தபடி ஒரு படத்தை நிக்கி பகிர்ந்து கொண்டார், "மகிழ்ச்சிக்கு இரண்டு படிகள்: 1. ஒரு நாயைப் பெறுங்கள் 2. அதிக நாய்களைப் பெறுங்கள் என்றார்.
மேலும் நிக்கி கூறும்போது, நான் எப்போதும் நாய்களை விரும்புகிறேன். ஆனால் எனது பெற்றோர் இந்த யோசனையை ஊக்குவிக்கவில்லை. நான் வீட்டில் கடைக்குட்டி, என்பதால், நான் ஒரு செல்லப் பிள்ளையைப் போலவே நன்றாக வளர்ந்தேன். என் கல்லூரி நாட்களில், என் நண்பர்கள் எனக்கு ஒரு நாயைப் பரிசளித்தனர். நான் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது, என் பெற்றோர் மறுக்கவில்லை. பல ஆண்டுகளாக, லாசா அப்சோ, ரோச்சர் என்ற அந்த நாய்கள் எங்களுடனே இணைந்திருக்கிறது. என் பெற்றோர் அவைகள் பாசமாக இருப்பார்கள்.
அவை இன்னும் என் பெற்றோருடன் பெங்களூரில் இருக்கின்றன. நான் சென்னைக்குச் சென்ற போது, எனது பெற்றோரும் நண்பர்களும் பெங்களூரில் வசிப்பதால் எனக்கு இங்கே தனிமையாகத் தொடங்கியது. எனக்கு வீட்டில் யாராவது தேவை, மகிழ்ச்சியான உணர்வுக்கு திரும்பி வர விரும்பினேன். எனக்கு சாம்பியன் (நாய் குட்டி) கிடைத்ததும் அதுதான். சில கட்டங்களுக்கு பிறகு, சாம்பியன் தனியாக இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே, கிங் காங்கை ஜோடி சேர்த்துவிட்டேன்.
இவ்வாறு நிக்கி கூறினார்.