லக்சரி பட்ஜெட் டாஸ்க் நாடா? காடா? - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 16

Advertisement

மாரி படப்பாடலுடன் துவங்கியது நாள். வழக்கம் போல் அப்போ தான் எல்லாரும் கண்ணு முழிச்சதால அனிதா மட்டும் சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல வேல்ஸ் கூட ஜாயின் பண்ண ரெண்டு பேரும் குத்தாட்டம் போட்டாங்க. ஷிவானி தனியா பிரேக் டான்ஸ் ஆடினாங்கனு எழுதவும் வேணுமா என்ன.

காலையில ஆரியும், சுரேஷும் சூடான டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்தாங்க. ஆரி எல்லாருக்கும் அட்வைஸ் பண்றான்னு கமல் சார் வரைக்கும் சொன்னாலும், நமக்குச் சரியா காண்பிக்கப்படலை. எல்லாரும் சொல்றதை நாமளும் நம்பறோம். இன்னிக்கு இருக்கற உலகத்துல நம்ம மேல ஒரு முத்திரை குத்தறது ரொம்ப ஈசி. ஒரே விஷயத்தைத் திருப்பி திருப்பி 10 தடவை சொன்னா பொய் கூட உண்மையாகிடும். அப்படி இருக்கும் போது ஆரி சாதாரணமா பேசறதை கூட அட்வைஸ் பண்றான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஆஜித்துக்கு மட்டும்தான் அட்வைஸ் பண்ணினதா ஆரியோட ஸ்டேட்மெண்ட்.

சுரேஷு கிட்ட நேரடியா எதுவும் பேசினதில்லை. அப்படி இருக்கும் போது நானட்வைஸ் செய்யறதா சுரேஷ் கமல் சார் கிட்டச் சொன்னது தப்புங்கறது ஆரியோட வாதம். உங்களுக்கு நேரடியா சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை, நீங்கப் பார்த்த, கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை எப்படி சொல்லலாம்னு ஆரியோட கேள்விக்கு வழக்கம் போல சுரேஷ் கிட்ட இருந்து நேரடியான பதில் இல்ல. அனீக்கு என்ன வார்த்தை யூஸ் பண்ணினேன்னு ஞாபகம் இல்லனு சொல்லிட்டு இருந்தார்.

எப்படி இதிலிருந்து தப்பிக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே ஸ்டோர் ரூம் மணி அடிக்க, கடகடனு எந்திருச்சு செருப்பை போட்டுட்டு கிளம்பிட்டாரு. ஒவ்வொரு தடவையும் அவர் கூட நடத்தப்படற உரையாடல் இப்படித்தான் முடியும். முடியுது. அப்படியிருந்தும் ஆரியும் பின்னாடி பேசிட்டே போனாரு. ஆனாலும் ஒன்னும் வேலைக்காகலை.

அடுத்து இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பிச்சுது. நாடா? காடா? என்றொரு டாஸ்க். சொர்க்கபுரி, மாயாபுரினு ரெண்டு ஊரு. மாயாபுரியை சேர்ந்தவங்க எப்படியாவது சொர்க்கபுரியை சேர்ந்தவங்களை அடிமையாக்கனும். முதல் சங்கு ஊதனு உடனே சொர்க்க புரியை சேர்ந்த ஒருத்தர் வெளிய வரனும். ரெண்டாவது சங்கு ஒலிக்கும் போது அவங்க சிலை மாதிரி இருக்கனும். அப்ப மாயாபுரியை சேர்ந்தவங்க, ஏதாவது செஞ்சு அவங்களை அசைய வைக்கனும். அப்படி அசைஞ்சுட்டா அவங்க அடிமையாகிடுவாங்க. அதான் டாஸ்க்.

சொர்க்கபுரி டீம் :

வேல்ஸ், நிஷா, ரியோ, சனம், ரம்யா, சோம், பாலா, சம்யுக்தா

மாயாபுரி அரக்கர் டீம் :

சுரேஷ், அர்ச்சனா, ரமேஷ், ஆரி, கேப்பி, அனிதா, ஷிவானி, ஆஜித்.

சுரேஷ் சொல்றா மாதிரி பிக்பாஸ் குசும்பு பிடிச்ச ஆளு தான். டீம் பிரிக்கும் போதே குரூப்பை மைண்ட்ல வச்சுட்டு பிரிச்சுருக்காரு. ஏதோ போனா போகுதுனு பாலாவை சொர்க்கபுரி டீம்ல போட்ருக்காரு. ஆனா பாலாவுக்கு அந்த டீம்ல இருக்கறது இஷ்டமே இல்லைனு நல்லாவே தெரிஞ்சுது. அதுவும் தன்னோட ஆர்ம்ஸை காமிக்க முடியாதபடி ட்ரெஸ் கொடுத்தது சுத்தமா பிடிக்கல போல.

மாயாபுரிக்காக அட்டகாசமான செட் போட்ருந்தாங்க. செட் அமைத்த டீமுக்கு ஒரு ஷொட்டு. உடைகள் வடிவமைப்பும் சூப்பரா இருந்தது. சுரேஷ் வழக்கம் போல கேரக்டராவே மாறிட்டாரு. ஏகப்பட்ட மாடுலேஷன்ல டயலாக்லாம் பேசினாரு.

சொர்க்கபுரில நிஷா வழக்கம் போல தனியா கலக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு கவுண்ட்டர் கொடுக்கறதையே தன்னோட வேலையா வச்சுருந்தாரு ரியோ. பாலாவுக்காவது இந்த டீம் தான் பிடிக்கல, ரியோவுக்கு இந்த கேமே பிடிக்கலனு அவன் முகத்துல அப்பட்டமா தெரிஞ்சுது.

முதல் சங்கு ஊதுனாங்க. சொர்க்கபுரி டீம்ல இருந்து வெளிய போறதுக்கு யாருமே ரெடியா இல்லை. ரியோ, சோம், பாலா மூணு பேரும் தயங்கி நிக்க, சனம் தான் போறதா முன்னாடி வந்தாங்க.

சனம் வெளிய போக, அவங்களை விதவிதமா டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தாங்க அரக்கர் டீம். ஆனாலும் அவங்களை அசைச்சுக்க முடியல. கடைசில முதல் ஆளா ஜெயிச்சாங்க.உள்ள திரும்பி வந்தவங்க ஸ்ட்ராட்டஜி எல்லாம் சொல்லி கொடுத்தாங்க.அந்த பக்கம் அரக்கர் டீமும் தங்களோட ஸ்ட்ராட்டஜியை மாத்தனும்னு பேசிட்டு இருந்தாங்க. அதன்படி வீட்டுல இருந்து வெளிய வரும்போது அவங்களை ப்ளாக் செய்யனும்னு முடிவு செய்யறாங்க.

அடுத்ததா சோம். விரக்தில விளையாடப் போன சி எஸ் கே பேட்ஸ்மேன் மாதிரியே வெளிய போனான். போன கொஞ்ச நேரத்திலேயே அவுட் ஆகிட்டான். அதனால அவனும் அரக்கர் டீம்ல அடிமையா சேர்ந்துட்டான்.

அடுத்து பாலா டாய்லட் கதவு வழியா போய் அரசை இருக்கைல உக்காந்துக்கனும்னு ப்ளான் போட்டு வெளிய போக, அங்க தள்ளுமுள்ளு ஆகிடுச்சு. ஆளாளுக்கு ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க. கடைசில பிக்பாஸ் கூப்பிட்டு மறுபடியும் மெயின் டோர் வழியா வரச்சொல்லிட்டார்.

மறுபடியும் திரும்ப வந்த பாலாவும் சீக்கிரம் அவுட்டாக, அவரும் அடிமையாக்கப்பட்டார்.சோம் பாலா ரெண்டு பேருக்குமே தன்னோட விக்கை கழட்டி அவங்க முகத்துக்கு முன்னாடி ஆட்டினதை தன்னோட ஸ்ட்ராட்டஜியா யூஸ் செஞ்சாரு சுரேஷ்.அடுத்தது ரியோ... எப்படியும் ஒரு பஞ்சாயத்து இருக்கும்னு எதிர்பார்த்திருந்தா அப்படி எதுவும் நடக்கல. ரியோ ஜெயிக்க 2-2 னு சமநிலைல இருந்தது.அடுத்து சம்யுக்தாவும் ஜெயிக்க 3-2 னு இருக்கும் போது கேம் நிறுத்தப்படுவதா சொன்னாரு பிக்பாஸ்.

சம்யுக்தா வந்த போது பாம்பு கூட படுத்துருக்கியேனு சுரேஷ் சொன்னதை ரெபர் பண்ணின அனிதா, அது சனமை தான் குறிக்குதுனு ஆரிகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. சனம் அவருக்கு எதிரினா நேரடியா மோதலாமே, எதுக்கு சம்யுக்தாவை ஆயுதமா யூஸ்பண்ணனும்னு கேட்டுட்டு இருந்தாங்க. அந்த இடத்துலேயே அதை அப்ஜெக்ட் செஞ்சுருக்காங்க போல. ஆக நமக்கு தெரிஞ்சு ஒரு பஞ்சாயத்து இருக்கு.

அடுத்து மீண்டும் பிக்பாஸ் அறிவிப்பு. கேஸ், மற்றும் தண்ணீருக்கு மீட்டர் கணக்கு வந்துருச்சு. இனிமே அளவா தான் பயன்படுத்தனும்னு அறிவிப்பு வருது. கூடவே ரேஷன் பொருட்கள் இனிமே வாரத்துக்கு ஒரு தடவை தான்னு சொன்னதும் எல்லாருக்கும் ஷாக்.ஏதாவது ஒரு பொருள் தீர்ந்து போச்சுன்னா எக்காரணம் கொண்டும் நடுவுல கொடுக்கப்பட மாட்டாதுனு கண்டிப்பான அறிவிப்பு ஹவுஸ்மேட்ஸ் நடுவுல தீவிரமா விவாதிக்கப் படுது.

இதை எப்படி சமாளிக்கறதுனு யோசிக்கும் போதே அர்ச்சனா அழறாங்க. அவங்களை சமாதானப்படுத்தறதோட நாள் முடியுது....

இன்னிக்கும் நாடா? காடா டாஸ்க் தொடரும் போது என்னென்ன பஞ்சாயத்து வருதுனு வெயிட் பண்ணி பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>