பிரபல நடிகருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் மேலும் ஒரு வாரம் தனிமை

by Nishanth, Oct 28, 2020, 10:55 AM IST

கொரோனா பரிசோதனையில் தனக்கு நெகட்டிவ் முடிவு வந்திருப்பதாக நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார். ஆனால் மேலும் ஒரு வாரம் தனிமையில் இருக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், டைரக்டராகவும் உள்ளார். மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற படத்தை இயக்கவும் செய்தார்.

இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடியது. மேலும் இந்தப் படம் தான் மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக வசூலைக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் நடிகர் பிரித்விராஜ் ஜனகணமன என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நடந்து வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பிரித்விராஜ் உள்பட 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து பிரித்விராஜ் கொச்சியில் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனிமையில் இருந்து வந்தார். அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கலைஞர்கள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பிரித்விராஜுக்கு ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தனக்கு நெகட்டிவ் முடிவு வந்திருப்பதாக பிரித்விராஜ் தனது பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ஒரு வாரம் தனிமையில் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரித்விராஜ் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜனகனமன படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை