வைட் அண்ட் வைட்டில் மாஸ் ஹீரோவாக போஸ் கொடுக்கும் காமெடி நடிகர்.. விஜய், சூர்யாவை அடித்து ஒவர் டேக் செய்த விவேக்..!!

by Logeswari, Oct 29, 2020, 10:54 AM IST

தமிழ் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து இவரது சிந்திக்க வைக்கும் வசனங்கள், உள்குத்து வசனங்கள் மூலம் பிரபலமாகி, காமெடி ஜாம்பவானாக.. தனக்கு என்று நீங்கா இடத்தை பிடித்துக்கொண்டவர் தான் நடிகர் விவேக். இவரை நகைச்சுவை நடிகனாக பெற தமிழ் திரையுலகமே கொடுத்து வைத்திருக்க வேண்டும் என பல கலைஞர்களால் பாராட்டை பெற்றவர். இவர் தூள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு என 500 மேல் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவரது சிறப்பு மிகுந்த நடிப்புக்கு பல தேசிய விருதுகளையும் தட்டி சென்றுள்ளார். தற்பொழுது இருக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளார் என்பது பெருமைக்குரிய ஒன்று. புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை நகைச்சுவை கலைஞராக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இவரது திறமைக்கு பறைசாற்றும்படி இந்திய அரசும் பத்ம ஸ்ரீ விருதை கொடுத்து கவுரவித்தது.இவர் ரஜினி, விஜய் போன்ற முன்னணி கதாநாயர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இவர் கடைசியில் வெள்ளை பூக்கள் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவரது கடைசி படம் வெள்ளை பூக்கள் என்பதை ஞாபகப்படுத்தவோ என்னவோ விவேக் சமீபத்தில் வைட் அண்ட் வைட் கோர்ட் சூட் அணிந்து பக்கா மாஸ் ஹீரோவாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் பார்க்க ஒரு பக்க பாலிவுட் நடிகர் போலவும் இன்னொரு பக்கம் கோலிவுட் நடிகர் போலவும் மிக கம்பிரமான தோற்றத்தில் காணப்பட்டார்.தமிழ் திரையுலகில் இவர் பிடித்த இடத்தை இன்னும் யாராலும் நிரப்ப முடியவில்லை....

சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூர்யா, விஜய் போன்ற மாஸ் ஹீரோவுக்கே பயங்கர டவ் கொடுப்பார் போல விவேக், இந்த வயதிலும் கம்பிரம் குறையாமல் இருக்கும் நகைச்சுவை நாயகன் என்று பலரும் புகழ்ந்து கூறுகின்றனர்.

Link:

துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளம் 18.5 லட்ச ரூபாய்...!

இன்றைய தங்கத்தின் விலை 29-10-2020

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை