பாண்டி நாட்டு கொடி பாடலோடு நாள் ஆரம்பித்த போது நேரம் 9.45. இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடத்த செட் போட்ருந்தாங்க.
இந்த வார டாஸ்க்க்கோட பேர் மணிக்கூண்டு.
ஹவுஸ்மேட்ஸ் 5 டீமா பிரிச்சுருக்காங்க. ஒவ்வொரு டீம்லேயும் 3 பேர். (50வது நாள் வரப்போகுது. வீட்டுக்குள்ள இன்னும் 15 பேர் இருக்காங்க. இன்னும் 8 வாரம் இருக்குனு கணக்கு வச்சாலும், 8 எவிக்ஷன் போக பைனலுக்கு 7 பேர் இருப்பாங்க போல. என்ன கணக்குனே புரியலையே... )
காலத்தை கணிப்பது தான் இந்த டாஸ்க். 3 பேர் சேர்ந்து கடிகாரம் மாதிரி சுத்தி வரனும். அதில்லாம் எந்த நேரத்துல என்ன செய்யனும்னு டைம் டேபிள் கொடுத்துருக்காங்க. அதை சரியா சொல்ல வேண்டியது டாஸ்க் செய்யறவங்களோட கடமை. இதுக்கு நடுவுல தான் டெய்லி டாஸ்க் வேற இருக்கு. ரெண்டு நாள் நடக்கப்போற டாஸ்க் இது.
11 மணிக்கு டாஸ்க் ஆரம்பிக்க போறதால எல்லாரும் பரபரப்பா இருந்தாங்க. முதல் டீம் சனம், அனிதா நிஷா. டாஸ்க் ஆரம்பிச்ச உடனே பிரேக்பாஸ்ட்டுக்கு ரெடி பண்ணிட்டு இருந்தாங்க. ரூல்ஸ்படி அது தப்பு. கடைசில யாரோ எடுத்து சொல்லி ஸ்டாப் பண்ணிட்டாங்க. பிரேக்பாஸ்ட் டைம் மதியம் 1.30, டின்னர் டைம் நைட் 11.30. இந்த டாஸ்க் ரொம்பவே கஷ்டம் தான் போல.
பிரேக்பாஸ்ட் டைம்ல நிஷா சாப்பிட வந்த போது ரியோ, சோம் ரெண்டு பேருமே அவங்களை ஓவரா கலாய்ச்சாங்க. நிஷா வெகுளியா பழகறதை இவங்க அட்வாண்டேஜ் எடுத்துக்கறாங்களோனு தோணுது. கண்டிப்பா நிஷா ஒரு நாள் வெடிச்சு அழப்போறாங்க. அர்ச்சனாவும் தனக்கு ஒருபடி கீழ தான் நடத்தறாங்க.
ஒவ்வொரு டீமுக்கும் 3 மணி நேரம். முதல் டீம் 3 மணி நேரம் 18 நிமிஷத்துல முடிச்சாங்க.
அடுத்த டீம் பாலா, ரம்யா, சுச்சி. முதல் டீமுக்கு வெயில்னா இவங்களுக்கு மழை.. சுச்சியோட கவுண்டிங் ரொம்ப ஸ்லோவா இருக்குனு கலாய்ச்சுட்டு இருந்தாங்க அர்ச்சனா. கண்டிப்பா அரை மணி நேரம் லேட்டாகும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா பாலா டீம் முடிக்க 4 மணி நேரம் 12 நிமிஷம் ஆச்சு.
இதுக்கு நடுவுல டெயிலி டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் ஜிப்ரீஷ் மொழில அரை மணி நேரம் பேசனும். இதான் சாக்குனு திட்ட வேண்டியவங்களை எல்லாரையும் திட்டிருப்பாங்கனு நினைக்கிறேன். ரியோ, சோம், கேப்பி 3 பேரும் நல்லா செஞ்சாங்க.
அடுத்த டீம் ஆரி, ரியோ, கேப்பி. இந்த டீம் டாஸ்க் செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஸ்நாக்ஸ் டைம் வந்தது. சரியா 6 மணிக்கு ஸ்டோர் ரூம்ல இருந்து 30 செகண்டுக்குள்ள யாராவது ஒருத்தர் எடுக்கனும். அடுத்து 7 மணிக்கு தண்ணி வேற வந்துது.
10 நிமிஷம் தான் தண்ணி வரும். . அதனால கொஞ்சம் ஸ்லோவா போலாம்னு ரியோ சொன்னது செம்ம ஐடியா.
குழாயடி சண்டை இதுவரைக்கும் பார்க்காதவங்களுக்கு ஒரு லைவ் டெமோ கொடுத்தாங்க அர்ச்சனாவும், நிஷாவும். நிஷா தூள் பண்ணிட்டாங்க. அனிதா, சனம், ஷிவானி மூணு பேரும் இதுல கலந்துகிட்டாங்க. அதுவரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த ஜித்து பாய், "சண்டை போடும் போது இடுப்பை தொடக்கூடாது" னு கொளுத்தி விட்டு போய்ட்டாரு. நிஷாவுக்கு வீக் பாயிண்ட் இடுப்பு தான் போலருக்கு. தொட்டா வடிவேலு கணக்கா போடா பன்னினு சொல்லிடும் போல.
டாஸ்க் செய்யும் போது யோகாலாம் செஞ்சாரு ஆரி ப்ரோ. ரசிகர்கள் கவனத்திற்கு.
10 நிமிடங்களுக்கு கருப்பு வெள்ளை படங்களில் வருவது போல பேசி நடிக்க வேண்டும் என்று ஒரு டாஸ்க். நிஷா, அனிதா & ஆரி, ரியோ & ரமேஷ்&கேப்பி ஒரு டீமா பர்பாமன்ஸ் கொடுத்தாங்க.
3 மணி நேரம் 1 நிமிடம் நேரத்தில் இந்த டாஸ்க்கை முடித்தனர் ஆரி, ரியோ, கேப்பி டீம். அட்டகாசம்.
ரியோ தன் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதுடன் முடிந்தது நாள்.