ஹீரோயின் முக்கியத்துவ கதைக்கு முழுக்கு போடும் 2 நடிகைகள்.. இயக்குனர்கள் அதிர்ச்சி..

by Chandru, Nov 18, 2020, 13:55 PM IST

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க இரண்டு நடிகைகள் முழுக்கு போட முடிவு செய்துள்ளனர். இதனால் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பாகுபலி, அருந்ததி ருத்ரம்மா தேவி என ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அனுஷ்கா. பாகுபலி படத்தில் நடித்த பிறகு உடல் எடையை குறைப்பதற்காக நடிப்பிலிருந்து இரண்டு ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார். உடல் எடை குறைந்த நிலையில் நிசப்தம் படத்தில் நடித்தார்.

சமீபத்தில் இப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. தனது அடுத்த படம் பற்றி அறிவிக்காமல் அனுஷ்கா மவுனம் சாதித்து வருகிறார். இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதில்லை என்று அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அனுஷ்கா ஷெட்டி போலவே சமந்தாவும் புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். அனுஷ்காவின் நிஷாப்தம் சமீபத்தில் ஒடிடியில் நேரடியாக வெளியானது.இருப்பினும் அவர் இந்த படத்திற்காக தனது பணிகளைக் கடந்த ஆண்டிலேயே முடித்தார்.

தியேட்டரில் வெளியிடுவதா, ஒடிடியில் வெளியிடுவதா என்ற குழப்பத்தால் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது. ஒருவழியாக ஒடிடியில் வெளியானது.அனுஷ்கா ஷெட்டி தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்காமலிருக்கிறார். சமீபத்தில் டோலிவுட்டில் பிரபலமான மேலாளர்களில் ஒருவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள முன்று கதைகளில் நடிக்கக் கேட்டு அனுஷ்காவை அணுகினார். ஆனால் அனுஷ்கா ஏற்க மறுத்துவிட்டார். இடைவெளிவிட்டு மெதுவாகப் படங்களைச் செய்ய விரும்புகிறார் அனுஷ்கா. அதாவது வருடத்திற்கு ஒரு படம் செய்ய எண்ணுகிறார். கூடுதலாக, தனது நண்பர்களுடனோ அல்லது தனக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனங்களுடன் பணியாற்ற விரும்புகிறாராம்.

சமந்தா அக்கினேனிக்கும் இதே நிலைதான். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரிமேக் ஜானு பெயரில் உருவானது. அது வெளியாகி தோல்வி அடைந்தது. இதையடுத்து சமந்தா எந்த புதிய படத்திலும் கையெழுத்திடாமலிருக்கிறார். கதாநாயகி மையமாகக் கொண்டு நடிக்க வந்த இரண்டு பட வாய்ப்புகளையும் நிராகரித்துள்ளார். ஜானு வெளியீட் டிற்கு முன்பாக, விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் சமந்தா, கல்வி மற்றும் ஆடை பிராண்டுகளைத் தொடங்குவது போன்ற பிற வணிக ரீதியாக தனது கவனத்தை திருப்பி அதில் பிஸியாக இருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை