ஹாரர் திரைப்படத்தில் கால் பதிக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி..!

by Logeswari, Nov 18, 2020, 18:56 PM IST

தனியார் தொலைக்காட்சியில் சில வருடத்திற்கு முன்பு ஆர்யாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்தது. அதாவது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் சில பெண்கள் மணப்பெண்ணாகவும் மற்றும் சாக்லேட் பாயான ஆர்யா மாப்பிள்ளையாகவும் கலந்து கொண்டார். ஆர்யாவின் மனதை யாரு ஜெயிக்கிறாரோ அவர்களை ஆர்யா கல்யாணம் செய்து கொள்வார் இது தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். இந்நிகழ்ச்சியில் அபர்ணதியும் கலந்து கொண்டார். இவரது சுட்டித்தனம், கல கல பேச்சு, கியூட்டான சிரிப்பு ஆர்யாவை மயக்கிதோ இல்லையோ ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்களை சுண்டி இழுத்தது. ஒரு கட்டத்தில் அபர்ணதி போட்டியை விட்டு நீக்கப்பட்டார்.

ஆனால் அவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பல மனதை கொள்ளை அடித்து இருந்தார். இவருக்கு ரசிகர்கள் "அபர்ணதி ஆர்மி" என்று சோசியல் மீடியாவில் தொடங்கினர். இதற்கு பிறகு தான் ஆர்மி என்ற பெயர் மிகவும் பிரபலமாகியது. இந்நிகழ்ச்சியில் இவர் சம்பாதித்த புகழ் மூலம் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு இவரை தேடி வந்தது. அதை சரியாக பயன்படுத்தி வருகிறார் அபர்ணதி. இயக்குனர் வசந்த பாலன் இயக்கி வருகின்ற ஜெயில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் திரைக்கு வர காத்து கொண்டிருக்கிறது. அடுத்து இவர் ஹாரர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்கவுள்ளார். இவர் திரைப்படத்தை பற்றி கூறியதாவது:- இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை கொண்டு எடுக்கப்படவுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுத்ததில்லை. இதற்கு உதாரணமாக விளங்கும் திரைப்படம் பிட்ஸா மற்றும் ராட்சஸன். என்னோட படம் அனைவரும் ரசித்து பார்ப்பது போல் சுவாரசியம் மிகுந்தவையாக இருக்கும் என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை