நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு 7 மில்லியன்: தென்னிந்தியாவில் முதலிடம்

நடிகர் கமல் ஹாசன் - சரிகாவின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுடன் இவர் நடித்து வெளிவந்த முதல் படம் 7ம் அறிவு (2011) பின் தனுஷ், விஷால் விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் தனது கால் பதித்தார். சிறு வயது முதலே இவர் இசை மீது ஆர்வம் கொண்டதால் தனது தந்தை நடித்து 2009ல் வெளியான உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார்.

அது மட்டுமில்லாமல் இவர் பின்னணி பாடிய பல பாடல்கள் சம்மா ஹிட் அடித்துள்ளது.
இளையராஜா இசையில் தேவர்மகன் திரைப்படத்தில் வரும் "போற்றி பாடடி பொன்னே" இவர் திரையுலகில் பாடிய முதல் பாடல்.

பாடகியாக ஹே ராம், என் மன வானில், உன்னை போல் ஒருவன்,முப்பொழுதும் உன் கற்பனைகள், வாரணம் ஆயிரம், 3, 7ம் அறிவு, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம் இது நம்ம ஆளு வரை இவர் பாடிய பாடல்கள் ஹிட் ஆகின.

இசை அமைத்த முதல் திரைப்படத்திற்க்கு (உன்னை போல் ஒருவன்) சிறந்த இசை அமைப்பாளராக இவர் வாங்கிய முதல் விருது "எடிசன் அவார்ட்ஸ்" .பிலிம் பேர் விருது, சைமா விருதுகள் ஸ்ருதியின் நடிப்புக்கு கிடைத்த விருதுகள்.

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம். தென்னிந்திய நடிகைகளில் தற்போது ஸ்ருதி தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். ஆம், சமூக வலைத்தளமான ட்விட்டரில் இவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 7 மில்லியனை தாண்டி இருக்கிறது. இது வரை எந்த ஒரு நடிகைக்கும் இல்லாத அளவுக்கு இவரின் புகழ் நாடு முழுவதும் பரவி இருக்கிறது என்பதை இந்த எண்ணிக்கை சொல்லிவிடும்.

ஸ்ருதியின் தந்தைக்கே 4.63 மில்லியன் பேர் மட்டுமே பின் தொடர்வோராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds