திருமணத்திற்கு முன் அவர் அப்படி இல்லை .. காஜல் அகர்வால் கொடுத்த உருக்கமான பேட்டி..

by Logeswari, Nov 23, 2020, 12:33 PM IST

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். 'நழுவுற மீன் மாட்டாமலா போய்டும்' என்பதற்கு ஏற்ப நீண்ட காலமாக திருமணத்தை தள்ளி போட்டு வந்த காஜலை இந்த ஊரடங்கில் அவரது குடும்பம் எப்படியோ திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டனர். அதன்படி கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தொழில் அதிபர் கவுதமுடன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்தில் எடுத்து கொண்ட இருவரும் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு கலர்புல்லான ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

தினமும் ஒரு அழகான சேலையை அணிந்து தனது கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து அவரது சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு வாரம் முன்பு காஜல் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். தினமும் இயற்கையின் அழகு, மற்றும் பல போஸில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து கலக்கிவருகிறார். அந்த விதத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தனது கணவருடன் எடுத்த கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். இதற்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் மற்றும் இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் காஜல் கொடுத்த பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். முதல்ல கவுதம் எனக்கு ப்ரொபோஸ் செய்யவில்லை எனது தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி கொண்டு தான் கடைசியில் என்னிடம் ப்ரொபோஸ் செய்தார்.

அதுவும் நான் ப்ரொபோஸ் செய்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற கூறிய பிறகு தான் எனக்கு ப்ரொபோஸ் செய்தார். எங்கள் இருவரில் கவுதம் தான் ரொம்ப ரொமான்டிக். கல்யாணத்திற்கு பிறகு உடனே தனி வீட்டில் குடியேறியது பல அனுபவங்களை கற்று தருகிறது. தனி வீட்டில் எனது அன்பு மிக்க கணவருடன் தனிமையில் வாழ வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அது இப்பொழுது நிறைவேறி விட்டது. கவுதம் நான் எங்கு சென்றாலும் போன் செய்து என் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். ஆனால் கவுதம் திருமணத்திற்கு முன்பு இப்படி இல்லை. கல்யாணம் ஆகி புருஷன் அந்தஸ்த்து வந்ததில் இருந்து என்னை குழந்தை போல் அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். இவ்வாறு தனது கணவர் பற்றி காஜல் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

You'r reading திருமணத்திற்கு முன் அவர் அப்படி இல்லை .. காஜல் அகர்வால் கொடுத்த உருக்கமான பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை