கடலின் அழகை ரசித்தபடி தேனிலவை ஜாலியாக கொண்டாடும் பிரபலம்..

by Logeswari, Nov 25, 2020, 12:47 PM IST

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். நீண்ட காலமாகத் திருமணத்தை இதோ.. இதோ.. என்று தள்ளிப் போட்டு வந்த காஜல் இந்த ஊரடங்கில் தங்களது பெற்றோர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டி கொண்டார்.

நீண்ட நாளாகக் காதலித்து வந்த தொழில் அதிபரை இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த 30ஆம் தேதி சமூக நெறிமுறைகள் ஆகியவை கடைப்பிடித்து மும்பையில் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களைத் திணற அடித்தது. திருமணத்திற்குப் பின்னும் பல ரகத்தில் கலர்புல்லான ஆடை இருவரும் மேட்சிங் ஆக அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இன்றும் காஜலுக்கும் அவரது கணவருக்கும் ரசிகர்களிடம் இருந்து திருமண வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. தினமும் ஒரு அழகான சேலையை அணிந்து தனது கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து அவரது சந்தோஷத்தைப் பிறருடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இரண்டு வாரம் முன்பு காஜல் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார். தினமும் இயற்கையின் அழகு, மற்றும் பல போஸில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து கலக்கிவருகிறார். அந்த விதத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சென்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மாலத்தீவை விட்டு வர காஜலுக்கு ஆசை இல்லை போல.

நேற்று கடலில் நின்று கொண்டு ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கையை ரசிப்பது போல புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இவர் செய்யும் லூட்டிகளை புகைப்படம் எடுக்கவே தனது கணவரைத் தேனிலவுக்கு அழைத்துச் சென்று இருப்பார் போல.. ஏனெனில் இருவரும் ஜோடியாக இருப்பது போல் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இவரைத் தொடர்ந்து நடிகை ரகுல், சமந்தா எனப் பல பிரபலங்கள் மாலத்தீவை நோக்கிப் பறந்துள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை