ஆரியை டார்கெட் செய்யும் பாலா , பாலாவின் ஸ்டேட்டர்ஜி - பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 59

Advertisement

ஒத்தையடி பாதையில பாட்டெல்லாம் காலங்கார்த்தால கேக்கற பாட்டாய்யா. எப்படியாப்பட்ட டான்சிங் பீட் சாங் போட்டாலும் ஆட மாட்டேங்கறாங்கனு கடுப்புல தான் இந்த பாட்டை போட்டு விட்ருக்கனும்.

பிக்பாஸ் கால் செண்டர் டாஸ்க் தொடர்கிறது. முதல் காலர் ஆஜித். அர்ச்சனா கிட்ட கேள்விகள் கேட்டார். டாஸ்க்னு வரும் போது அர்ச்சனாவோட பர்பாமன்ஸ் எப்பவுமே டாப் நாட்ச்ல இருக்கும். அதுக்கான உதாரணம் தான் நேற்றைய டாஸ்க். ஆஜித்தோட கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இல்லாம அட்டகாசமா பதில் சொன்னாங்க. அதுவும் மொத்த ஹவுஸ்மேட்ஸை நாமினேட் செய்யனும் ஆஜித் கேட்டுகிட்ட போது, அர்ச்சனாவோட ப்ளோவும் சரி, அவங்க சொன்ன ரீசனும் சரி. பட்டாசு. பிக்பாஸ் எப் எம் டாஸ்க்ல இதே மாதிரி ஹவுஸ்மேட்ஸ் அத்தனை பேருக்கும் இண்ட்ரோ கொடுத்தது நினைவிருக்கலாம்.

நான் வீட்டுக்கு போகனும்னு சொன்னதையும், டாஸ்க் சிறப்பா செய்யறதையும் கனெக்ட் பண்ணி கேள்வி கேட்ட ஆஜித்துக்கு ஒரு ஷொட்டு. ப்ரோமோல அதை காமிச்சுட்டு, மெயின் எபிசோட்ல கட் பண்ணி அன்சீன்ல வச்ச எடிட்டிங் டீமுக்கு ஒரு குட்டு.

பதில் சொன்ன போதும் சரி, கேள்வி கேட்ட போதும் சரி ஆஜித் சிறப்பாவே பண்ணிருக்கான். ரம்யா கேட்டா மாதிரி, அர்ச்சனா குரூப்மேட்ஸ் பத்தி மட்டும் கேக்காம, மொத்த ஹவுஸ்மேட்ஸ் பத்தியும் கேட்டது ஆஜித்தோட புத்திசாலித்தனம். வெல்டன்.

அடுத்த காலர் கேப்பி, அவங்க தோழர் சோம்க்கு தான் கால் செஞ்சாங்க. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கால் செஞ்சுக்கறதுல என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுது. "இந்த பிக்பாஸ் வீட்டுக்கு ஏன் வந்தீங்கனு" கேட்ட கேள்விக்கு சோம் சொன்ன பதில் கொஞ்சம் உணர்வு பூர்வமா இருந்தது. இந்த வாரம் நாமினேட்ல இருக்கறவங்களை பத்தின பாசிட்டிவ் விஷயங்களை சொல்லனும். ரம்யா பேரை சொல்லும் போது அவ்வளவு சிரிப்பு. கடைசியா கால் கட் பண்ண அவர் செஞ்ச விஷயம் க்யூட்டா இருந்தது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் நிஜமாவே நல்லா செய்யறாரு சோம்.

வெளிய வந்ததுக்கு அப்புறம் ரம்யாவை பத்தி பேசினதை வச்சு ஓட்டிட்டு இருந்தாங்க. தன்னுடைய ப்ளாஷ்பேக் பத்தி பேசினதுல கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாரு சோம்.

அடுத்தது பிக்பாஸ் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த பாலா vs ஆரி உரையாடல். அப்படினு நினைச்சோம் கடைசில அது பிரசங்கம் மாதிரி முடிஞ்சு போச்சு. பிக்பாஸ் வீட்டுல முக்கியமான டாஸ்க் நடக்கும் போது மொத்த அட்டன்ஷனையும் தன் மேல திருப்பிக்க்கறது தான் பாலாவோட ஸ்டைல். சாம்க்கு விட்டு கொடுத்தது, சனம்க்காக வாதாடினது, முந்திரிக்கொட்டைத் தனமா சண்டை போடறது இது எல்லாமே அந்த வகை தான். சரியோ, தப்போ தன்னை சுத்தி எல்லாரும் விளையாடனும்னு விரும்பறாரு பாலா. மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு அதுல விருப்பம் இல்லாம போனாலும் பாலாவோட ஸ்டேட்டர்ஜியினால, அவங்களுக்கு வேற ஆப்ஷனே இல்லாம போய்டுது.

நேத்து நடந்ததும் அதுக்கு ஒரு உதாரணம். ஆரி மேல பாலாவுக்கு இருந்த ஆதங்கம், புகார்களை வரிசையாக எழுதி வைத்து சொல்லிவிட்டார். அதற்கு ஆரி கிட்ட இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கலை. அதுதான் ஹைலைட். பாலா கையில் எடுத்த ஸ்டேட்டர்ஜி விமர்சனத்துக்குள்ளாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பாலா என்ன செய்யப் போறான்னு எதிர்பார்த்தவங்க எல்லாரையும் ஆச்சரியபடுத்தினாருனு உறுதியா சொல்ல முடியும். பாலாவை வெறுப்பவர்கள் கூட நேற்று அவரை வியந்து பார்த்திருப்பார்கள்.

ஆரி கிட்ட இருந்து எந்த பதிலும் பாலாவுக்கு தேவையில்லை. ஆனா ஆரியை பத்தி பேசுவதன் மூலமாக ஆடியன்ஸ் முன்னாடி அவர் அம்பலப்படவேண்டும் என்பதே பாலாவுடைய ஸ்டேட்டர்ஜி. இங்க ஆரியும் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வாய்ப்பில்லை. சோ வேற வழியே இல்லாம முழுசா கேட்டே ஆகனும்.

ஆரி சொல்வது ஒன்று செய்வது ஒன்று. மாத்தி மாத்தி பேசறாரு, இதெல்லாம் பாலா அவர் மேல் வைத்த குற்றச்சாட்டுக்கள். இது வரைக்கும் நடந்த சம்பவங்களை ஆதாரங்களாகக் கொண்டு அதை எல்லாத்தையும் நிரூபிக்கனும்ங்கறது பாலாவோட ப்ளான். அதை வெற்றிகரமா செயல்படுத்தி காட்டிட்டாருன்னு தான் சொல்லனும்.

சரி ஏன் இந்த ஸ்டேட்டர்ஜியை தேர்ந்தெடுக்கனும். தன்னுடைய குற்றச்சாட்டின் பக்கம் நியாயம் இருக்கும் போது, அதற்கான ஆதாரம் இருக்கும் போது, நேரடியா ஆரிகிட்ட கேள்விகள் கேட்டு பதில் வாங்கிருக்கலாமேனு கேள்வி தோணுவது இயல்பு.

முதல் முக்கியமாக காரணம், ஆரிக்கு பின்பாயிண்டா பேச தெரியாது. ரொம்பவும் சுத்தி வளைச்சு, குழப்பி அடிச்சு தான் அவர் பேசுவாரு. அதே மாதிரி ரொம்பவும் விவரணையா பேசும் போது, பாலாவோட ஒரே ஒரு கேள்வில கூட அந்த கால் முடியக்கூடிய அபாயம் இருக்கு. தன்னிடம் கேட்கபட்ட கேள்விக்கு, எதிராளி செய்த தவறை சுட்டிக் காட்டி நியாயப்படுத்தி பேசுவது ஆரியின் வழக்கம். அப்படி பாலாஜியோட தவறை அவர் சுட்டிக்காட்டும் போது, கேள்வி-பதில் உரையாடல் சண்டைல முடிய நிறைய வாய்ப்புகள் இருக்கு.

அதே மாதிரி பாலாவால கவுண்ட்டர் கொடுக்காம இருக்க முடியாது. (உதாரணம், ரமேஷ் கூட ஆரி பேசும்போது தறுதலை வார்த்தையை இழுத்தது.) தன்னுடைய வாதம் தோற்றுப் போகுது அல்லது பாயிண்ட்ஸ் உடைக்கப்படுதுனு தெரியும் போது எதிராளியை எரிச்சல்படுத்தி, விவாதத்தை திசை திருப்பறதும் பாலாவோட வழக்கம். தன்னுடைய வீக்னெஸ்ஸை முழுமையாக அறிந்தவர் பாலா. இதை எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஏன்னா அவர் கையில இருந்த பேப்பர்ல அவ்வளவு விஷயம் எழுதி வச்சுருந்தாரு. அது எல்லாத்தையும் பேசனும்னா கேள்வி-பதில் நிகழ்ச்சியா கொண்டு போக முடியாது. அதனால இந்த ஸ்டேட்டர்ஜியை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

பேசி முடிச்சதுக்கு அப்புறம் ஆரியே பாராட்டித்தான் சொன்னாரு. பாலாவோட இண்டென்ஷனை சரியா புரிஞ்சுகிட்டாருனு தான் சொல்லனும். ரியோவுக்கு தான் பலத்த அதிர்ச்சி. ஆரி எந்த பதிலுமே சொல்லாம கால் பேசி முடிச்சதும், என்னய்யா நடக்குது இங்கனு குழப்பம்.

ஆரிக்கு பேச வாய்ப்பே கொடுக்காம போனது கண்டிப்பாக விமர்சிக்கப்படும். இது பாலாவுடைய வாய்ப்பு. அதை எப்படி பயன்படுத்தனும்னு முடிவு செய்ய பாலாவுக்கு உரிமை இருக்குனு நினைக்கிறேன். ஆனா அதே சமயம் ஆரிக்கு விளக்கம் கொடுக்க நேரம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு, அதை செய்யாம கால் கட் பண்ணினது நேர்மையற்ற செயல்.

பேசி முடிச்சு வெளிய வந்த உடனே ரியோ கிட்ட போய் பாலா பேசினதை பத்தி சொல்லிட்டு இருந்தாங்க கேப்பி. ரியோ-ஆஜித் கால் முடிஞ்ச உடனே பாலா கிட்ட போய் ரம்யா பேசின ரீசனை சொல்லி தான் ரம்யாவை நாமினேட் செஞ்சாங்க. இப்போ அதே விஷயத்தை கேப்பி-ரியோ செய்யறாங்க. தட் ரத்தம், தக்காளிச் சட்னி மொமண்ட்.

அவனோட குரல் மட்டும் ஒலிக்கனும்னு பேசினதா மூத்த ஹவுஸ்மேட்ஸ்கிட்ட சொல்லிட்டு இருக்காரு ஆரி. அர்ச்சனா, ரியோ, நிஷா குரூப் கிட்ட அவன் பேசின விஷயத்தை பத்தி சொல்லிட்டு இருக்கும் போது ஆரி அங்க வராரு. "என்னை காலி பண்ணிட்டேன்னு சொல்லிட்டு இருந்தியா" னு பாலா கிட்ட கேட்டாரு. அப்படில்லாம் இல்லைனு சொல்லி கை கொடுத்துட்டு வெளிய வந்துட்டான் பாலா. புத்திசாலித்தனமா விளையாடினதா அப்ப பாலாவை பாராட்டறாரு ஆரி.

கமல் சார் ஷோல பாலாவோட இந்த ஸ்ட்ராட்டஜி தனியா விவாதிக்கப்படக்கூட வாய்ப்பு இருக்கு. ஆனா அதுவரைக்கும் பாலா வேறெந்த பர்னிச்சரையும் உடைக்காம இருக்கனும்.

கேப்பி கிட்ட இதை பத்தின ஒபீனியன் கேக்கறாரு ஆரி. "உங்களை டேமேஜ் பண்ணனும்னு செஞ்சா மாதிரி இருக்குனு" நேரடியா பதில் சொல்றாங்க கேப்பி. இந்த வார்த்தை சொல்ல வேற எந்த ஹவுஸ்மேட்ஸ்க்காவது தைரியம் இருக்குமானு கேட்டா, சந்தேகம் தான். பாலாவை தன்னுடைய முழுமையான எதிரியா பிக்ஸ் பண்ணிட்டாங்க கேப்பி.

இதுல இன்னொரு நுணுக்கமான விஷயம் ஒன்னு இருக்கு. தன்னையும் ஆஜித்தையும் குழந்தைங்கனு பாலா சொன்னதை கேப்பி ரசிக்கவே இல்லை. அதுக்கு பாலா கிட்ட சண்டைக்கு கூட போனாங்க. கேப்பியை தனக்கு சமமான போட்டியாளரா பாலா ஏத்துக்கலை. அது தான் கேப்பியோட கோபம். நானும் இங்க விளையாடத் தான் வந்துருக்கேன் என்பது கேப்பியோட வாதம். இந்த இடத்துல தான் கேப்பியை மதிச்சு கருத்து கேக்கறாரு ஆரி. இந்தளவு நுணுக்கமான ஸ்ட்ராட்டஜிஸ் தான் இந்த சீசனோட பலம். ரம்யா, ஆஜித், ஷிவானி 3 பேரை தவிர மூத்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே பாலாவுக்கு எதிரான மனநிலைல தான் இருக்காங்க. அந்த எதிர்ப்பு மனநிலையை அணையாம பார்த்துக்கறாரு ஆரி. பாலா அல்லது பாலா உடன் இருப்பவர்கள் தான் மத்தவங்களோட டார்கெட்.

ஆரி இந்த வாரம் ரொம்ப கூலா இருக்காரு. காரணம் அவர் எதிர்பார்த்தபடி தான் எல்லாமே நடக்குது. அவருடைய திட்டங்கள் வெற்றி அடையுது. கேம் அவர் எதிர்பார்த்த, ஆசைப்பட்ட திசைல போகுது. சாம் வெளிய போனது ரம்யா நாமினேஷன்ல வந்தது, அர்ச்சனா குழுவுடனான சுமூக உறவு இதெல்லாமே சக்சஸ் தான். அதனால இந்த வாரம் தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கறாரு. நாமினேஷன்ல இருந்தாலும் முதல் நபரா சேவ் செய்யப்படுவது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். அவரோட அடுத்த கட்ட நடவடிக்கை பத்தி பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்து கிராமிய விளையாட்டை ஒரு டாஸ்க்கா கொடுத்திருந்தாங்க. இந்த சீசன்ல நடந்த உருப்படியான, சுவாரஸ்யமான ஒரு டாஸ்க். நல்ல எண்டர்டெயின்மெண்ட்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>