சின்னத்திரை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் இதுதானா?? போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை..!

by Logeswari, Dec 9, 2020, 11:49 AM IST

மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. இவர் விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் கலையரசியாக நடித்து தமிழ் மக்களின் மனதில் கொள்ளை அடித்தவர். அதன் பிறகு கிடைத்த வாய்ப்பை அனைத்தையும் சரியாக கையாண்டார். 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக அறிமுகமாகினார்.

இந்த சீரியல் இவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது. இவர் பிறக்கும் பொழுது குடிசையாக இருந்த தனது வீட்டை தனது சுய சம்பாத்தியத்தில் மாடி வீடாக மாற்றினார். இவருக்கு தமிழ்நாட்டில் பரவலாக எங்கு பார்த்தாலும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருக்கு அடுத்த மாதம் தொழில் அதிபருடன் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று அதிகாலையளவில் சித்ரா நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஊடகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

சித்ராவுடன் அவரது வருங்கால கணவரும் ஓட்டலில் இருந்ததால் போலீஸ் முதற்கட்ட விசாரணையாக அவரிடம் இருந்து தொடங்கியது. போலீசிடம் அவர் கூறியதாவது:- சித்ரா குளிக்க போவதால் தன்னை வெளியே இருக்குமாறு கூறினார். அதனால் அவர் வெளியே சென்றுள்ளார். ஆனால் சித்ரா உள்ளே சென்று இரண்டு மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் ஹேமந்த் கதவை தட்டியுள்ளார். ஆனால் சித்து கதவை திறக்காததால் அந்த அறையின் மாற்று சாவியை பயன்படுத்தி கதவை திறந்துள்ளார்.

அப்பொழுது சித்து அவரது புடவையில் தூக்குமாட்டி இறந்து இருப்பதை கண்டவுடன் அவர் 100க்கு அழைத்ததாக கூறினார். ஆனால் நேற்று சித்துவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் ஏதோ சண்டை நடந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அவரது முகம் மற்றும் உடலில் பல காயங்கள் உள்ளதால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

You'r reading சின்னத்திரை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் இதுதானா?? போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை