தெலுங்கு திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக கூறியும் நியாயம் வேண்டும் என கோரியும்நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு மிரட்டி உள்ளார்.
அதன்படி முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் தெரியும்படியான ஒரு புகைப்படத்தை ஸ்ரீலீக்ஸில் வெளியிட்டார். தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ‘நீ எங்கே என் அன்பே” என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்த பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலுவும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு மறுத்து இருந்தார். ஆனால் தொடர்ந்து ஸ்ரீரெட்டி மீது குற்றம் சுமத்தி வந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.
இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இவர் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்தார். திடீரென தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.