ஆரியின் அவசர விளையாட்டு.. நரிகளின் தந்திரம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

Advertisement

முந்தைய நாளின் தொடர்ச்சி. அதே லக்சரி பட்ஜெட் டாஸ்க், அதே ரூல்ஸ் பிரச்சினை, அதே சண்டை. ஒரு டாஸ்க் கொடுத்தா அதை எப்படி சுவாரஸ்யமா விளையாடலாம்னு யோசிச்சு பார்த்துருக்கேன். ஆனா எப்படி சண்டை போடலாம்னு யோசிச்சு விளையாடறதை இப்பத்தான் பார்க்கறேன். நேத்து ப்ரொகிராம்ல சண்டை போடாத ஆள் யார்னா பாலா, ஷிவானி, ஆஜித் 3 பேர் தான். மீதி பேர்லாம் ரணகளமா கத்திட்டு இருந்தாங்க.

அட சண்டை போட்டுட்டு இருந்த அனிதா சும்மா பேசிட்டு இருந்த சோமை கூப்பீடிட்டு சண்டை போட்டுதுன்னா பார்த்துக்குங்க. அட அந்த சண்டையாவது ரெண்டு பேருக்கு நடுவுல நடந்தா பரவால்ல. அவங்க என்ன பேசினாங்கனு எழுதலாம். ஆனா ஒரே டைம்ல நாலஞ்சு பேர் சேர்ந்து பேசிட்டே இருந்தா, எதைனு எழுதறது. அதனால யாரெல்லாம் சண்டை போட்டாங்கனு வரிசை பார்த்துடலாம்.

முதல் சண்டை ஆஜித்தோட முட்டையை தொட்டதுனால வந்தது. ரம்யா தான் முதல்ல அப்ரோச் செய்யனும்னு ஏற்கனவே பேசிருந்தாங்க. பஸ்ஸர் அடிச்ச உடனே ரம்யாவும் அட்டாக் செய்ய போறாங்க. அப்போ ஆஜித் பக்கத்துல நின்னுட்டு இருந்த கேப்பி, டக்குனு அட்டாக் பண்ணி முட்டையை தொட்டுட்டாங்க. இதனால ஆஜித் ரொம்பவே கடுப்புல இருந்தான். இது தொடர்பா ரம்யாவுக்கும், கேப்பிக்கும் விவாதம் போய்ட்டே இருந்தது.

அர்ச்சனாவும் ரியோவும் பேசும் போதும் கேப்பி மேல தான் தப்புனு சொன்னாங்க. ஆனா கேப்பி அதை ஒத்துக்கலை.

பாலா மட்டும்தான் சரியா விளையாடறதா ரியோ பாராட்டிட்டு இருந்தாரு.

ஆஜித்தும், ஷிவானியும் லக்சரி பட்ஜெட் பர்ச்சேஸ் பத்தி பேசிட்டு இருந்தாங்க.

நாள் 73

கோழி வெடக்கோழி பாட்டு போட்டாங்க.

முதல் கோழி டீம் ரியோவும், ஷிவானியும் தான்.

அர்ச்சனா, ரம்யா, அனிதா, ஆஜித், ஆரி, சோம் எல்லாரும் மீட்டிங்ல பேசினாங்க. யாருக்கு முதல்ல வாய்ப்பு கொடுக்கலாம், எந்த அடிப்படையில வாய்ப்பு கொடுக்கலாம்னு ஆரி பேச ஆரம்பிச்ச போது நல்லாத்தான் இருந்தது. ஆனா நடுவுல ஆளாளுக்கு பேசி கன்ப்யூஸ் பண்ணிட்டாங்க. கடைசில எந்த முடிவும் எடுக்காமலே மீட்டிங் முடிஞ்சுது. முதல்ல ஆஜித் போறதா இருந்தது, அடுத்து அனிதா பேர் வந்த போது சோம் ஒத்துக்கலை. அதாவது ரியோவை முதல்ல அட்டாக் செய்யப்போறது ஆஜித். ஏன்னா அவன் கிட்ட பணமே இல்லை. அதனால ஆஜித்துக்கு வாய்ப்பு. ஒருவேளை அவன் தவறிட்டா அடுத்து ரியோவை அட்டாக் செய்யறவங்களுக்கு எந்த தகுதியும் பார்க்கலை.

ஆஜித் போனதும் அவுட் ஆகிட்டாரு. அப்ப அடுத்து அனிதா போய்ருக்கனும். ஆனா பக்கத்துல நின்ன ஆரியும் அட்டாக் செஞ்சாரு. முதல்ல தொட்டது அனிதா தான். ஆனா ஆரி முட்டையை எடுத்து கேமரா முன்னாடி நின்னு தான் ஜெயிச்சதா டிக்ளேர் பண்ணிட்டாரு.

அனிதாவும் ஆரியும் விவாதம் செஞ்சுட்டு இருந்தாங்க. ஆனா ரியோ யார் கிட்டயும் பணத்தை கொடுக்கலை.

வீட்டுக்குள்ள அர்ச்சனா, கேப்பி சாப்பிட்டு இருக்கும் போது இதை பத்தி பேசறாங்க. ஆரி தான் குறுக்க வந்தாரு. நரியா இருந்தாலும் மானஸ்தனா இருக்கனும்னு அர்ச்சனா சொல்லவும், ஆரி டென்சன் ஆகிட்டாரு. எனக்கு மானம் இல்லம்மானு சொல்லிட்டு வெளியே போய்ட்டாரு.

ரியோவை குரூப்பா அட்டாக் செஞ்சதால, அவர் முட்டையை எடுத்தது செல்லாதுனு மறுபடியும் முட்டையை எடுத்துட்டு வந்து வச்சுகிட்டாரு ரியோ. இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்தது அர்ச்சனா தான். ரியோ முட்டையை எடுத்துட்டு வரதை பார்த்த ஆரி இன்னும்டென்சன் ஆகிட்டாரு.

முட்டையை திருப்பி எடுத்ததுல ரியோ ஒரு சின்ன கண்டிஷன் போட்டாரு. அடுத்த ரவுண்டுக்கு ரெண்டு முட்டை வந்தா, தன்னோட தோல்வியை ஒப்புக்கறதா சொல்லிருந்தாரு ரியோ. ஆனா அடுத்த ரவுண்ட்ல ஒரு முட்டையை மட்டும் அனுப்பி ரியோ எடுத்தது சரிதான்னு சொல்லிட்டாரு பிக்பாஸ்.

ரியோ தன்னோட முட்டையை திரும்ப எடுத்ததுக்கு அப்புறம் ஆரி, அர்ச்சனா, ரம்யா, அனிதாவுக்கு இடையில பெரிய விவாதம் நடந்தது. ஒன்னும் புரியல.

அடுத்ததா கேப்பி. அங்கயும் ஒரு பெரிய விவாதம்.

அடுத்து அர்ச்சனா. அவங்க முட்டை மேலேயே அப்படியே படுத்துட்டாங்க. அதை தொடப்போன போது அந்த முட்டை உடைஞ்சு போச்சு. உடைச்சது சோம் தான்னு அர்ச்சனா சொல்ல, அர்ச்சனா தான்னு சோம் சொல்ல மறுபடியும் சண்டை.

அடுத்து அர்ச்சனாவை கன்பெஷன் ரூம் கூப்பிட்டு பேசினாரு பிக்பாஸ். அனிதாவும் கன்பெஷன் ரூமுக்கு போனாங்க. ஆனா ரொம்ப அழாம வந்ததை பார்த்த ஆடியன்ஸ் தன் கையை கிள்ளிப் பார்த்துருப்பாங்க. அவ்வளவு தான்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>