தமிழ் -தெலுங்கில் மாறி மாறி நடிக்கும் ஹீரோவுடன் நிக்கி டேட்டிங்..

by Chandru, Dec 17, 2020, 13:24 PM IST

தமிழில் மிருகம் படத்தில் நடித்தவர் ஆதி. முதல்படமே வில்லத்தனமான கதாபத்திரம் ஏற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான் போன்ற படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் கவனத்தை திருப்பினார். தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடிக்கும் ஆதி தெலுங்கில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசு உள்ளது. நிக்கி கல்ராணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். அதன் பிறகு அவர் ஐதராபாத் சென்று ஆதியை சந்தித்தார். இருவரும் ஏர்போர்ட்டில் ஜோடியாக நடந்து வந்த படங்கள் சில மாதங்களுக்கு முன் வைராலானது.

இருவரும் டேட்டிங் செய்து வந்தாலும் தங்களின் காதல் பற்றி உறுதி செய்யவில்லை. தற்போது ஆதி தமிழில் கிளாப் என்ற படத்தில் நடிக்கிறார். “கிளாப்” படத்தின் மொத்த படக்குழுவும், படப்பிடிப்பின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்த மகிழ்ச்சியில், பெரும் உற்சாக மனநிலையில் உள்ளனர். இப்படம் பற்றி தயாரிப்பாளர் ஐ பி. கார்த்திகேயன் கூறியதாவது: இளமை துள்ளல் மிகுந்த, திறன்மிகு இளம் கலைஞர்களுடன் பணிபுரிந்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் ஆதியுடன் இணைந்தது, மிகச் சிறந்த அனுபவத்தை தந்தது. பொதுமுடக்க காலம் முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தபோது, முதல் ஆளாக படப்பிடிப்பை துவக்க, அவர் தான் பெரும் ஆர்வம் காட்டினார்.

தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக இருப்பதை தாண்டி, இந்தப்படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் இப்படத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் மிக வலுவான கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். இயக்குநர் பிரித்வி ஆதித்யா அசாத்திய திறமை கொண்ட இயக்குநர். மிகவும் பிரபலமான நடிகர்கள் குழுவையும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான குழுவையும் ஒருங்கே கையாள்வதென்பது எளிய பணியல்ல. ஆனால் இயக்குநர் பிரித்வி ஆதித்யா அனுபவமிக்க இயக்குநரை போல் மிகத்திறமையாக படப்பிடிப்பை கையாண்டார். இசைஞானி இளையராஜா இசையை உங்களுக்கு வழங்க, படக்குழுவில் நாங்களும் பெரும் ஆவலுடன் உள்ளோம்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பிக் பிரின்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயனுடன் பி. பிரபா, ப்ரேம், மனோஜ் மற்றும் ஹர்ஷா இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். “கிளாப்” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அனுபவமிக்க நடிகர்களான பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி மற்றும் முனீஷ்காந்த் இணைந்து நடிக்கிறார்கள். மொத்தம் 65 நாட்களில் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. முதல் நாள் முதல் 65வது நாள் வரை நடந்த பணிகள் பற்றிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடைசி நாளில் இயக்குனர் பேக்கப் சொன்னதும் படக்குழு ஆரவாரம் செய்தது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை