ஆரியை விமர்சனம் செய்யும் பாலா ,பாலாவின் அதிரடி - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 75

Advertisement

பிக்பாஸ் கன்பெஷன் ரூம் கூப்பிட்டு பேசறது எதுக்காகனு எல்லாருக்குமே ஒரு டவுட் இருக்கு. அடுத்த வாரத்துல இருந்து போட்டிகள் இன்னும் கடுமையா இருக்கப் போறதால (நம்பிக்கை... அதானே வாழ்க்கை) ஒவ்வொருத்தரையும் தனித்தனியா கூப்பிட்டு பேசறாருனு நினைக்கிறேன். இவ்வளவு நாள் இருந்தாலும் எல்லாருக்குமே தன்னைப் பத்தின சில சந்தேகங்கள் இருக்கும். அவங்களுக்கு கிடைக்கிற ஆதரவு, எதிர்ப்பு எந்தளவு உண்மைனு சந்தேகப்படுவாங்க. எல்லாருமே போட்டியாளர்கள் ஆகிட்டதால மனம் விட்டு பேச ஆளில்லாத ஒரு இடத்துல, அதுக்கான வாய்ப்பை வழங்கக் கூடிய இடம் கூட இருக்கலாம்.

வீட்டுக்குள்ள, கேமாராவுக்கு முன்னாடி அழாத ஷிவானி, பிக்பாஸ் முன்னாடி அழுதாங்க. தன் குடும்பத்தை மிஸ் செய்யறதா சொன்ன போது கண்கலங்காத ஆரி, முழுமையான பங்களிப்பு கொடுத்ததா சொன்ன போது நெகிழ்ந்து போனார். அர்ச்சனாவோட எண்ணம் எல்லாமே தன்னோட வீட்டை பத்தி தான் இருக்கு. அதை பத்தி பேசி தெளிவானது. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி பேசி அனுப்பினார் பிக்பாஸ்.

நேத்து முதல்ல கேப்பி வந்தாங்க. அவஙக வீட்டை பத்தி தான் பேசினாரு பிக்பாஸ். குரூப்பிசம், பேவரட்டிசம்லாம் எதுவுமே நடக்கலைனு உறுதியா நம்பறாங்க கேப்பி. ஆனா தொடர்ந்து இப்படியான குற்றச்சாட்டு வரும் போது, அதை முற்றிலுமா மறுக்கறது நியாயமில்லை. பிறந்த நாளைக்கு என்ன கிப்ட் வேணும்னு கேட்டாரு. ஆனா நேத்து தான் பர்த்டேனு நிகழ்ச்சி முடிவுல தான் தெரிஞ்சுது. நீங்க இனிமே பிக்பாஸ் கேப்பினு சொல்லி அனுப்பினாரு. அனிதாவோட சிரிப்பு மாதிரி, கேப்பி கத்தறதும் வித்தியாசமா இருக்கு.

அடுத்து ரம்யா வந்தாங்க. பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு ஏதோ பதில் சொல்ல, அவரே வேற கேள்வி கேட்டு அனுப்பி வச்சாரு.

அர்ச்சனா & சோம் ரெண்டு பேரும் சேர்ந்து ஆரியை பத்தி பேசிட்டு இருந்தாங்க. கன்பஷன் ரூம் போய் பேசிட்டு வரதை கவுன்சிலிங்னு சொல்றாரு சோம். கவுன்சிலிங் போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் ஆரி அமைதியா இருக்கறதா சொல்றாங்க.

ரெண்டு நாளைக்கு முன்னாடி இதை நாம பதிவு பண்ணிருந்தோம். ரொம்பவும் இறுக்கமான மனநிலைல இருக்கற ஹவுஸ்மேட்ஸ்க்கு ஒரு வடிகால் மாதிரி தான் இந்த கவுன்சிலிங். மனசுல இருக்கறதை வெளியே சொல்றதுக்கு ஒரு ப்ளாட்பார்ம். உள்ள போய்ட்டு வந்ததுக்கு அப்புறம் எல்லாருமே கொஞ்சம் தெளிவாத் தான் இருப்பாங்க. அவங்க மனநிலையும் ஆரோக்கியமா இருக்கும்.

பாலா & ஆஜித் ரெண்டு பேரும் ஆரியை பத்தி பேசறாங்க. இந்த வீட்ல இருக்கற மூத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு தகுதி இல்லைனு சொன்ன விஷயம் தான்.

அனிதாவும், ஆரியும் வரும் வாரங்கள்ல இந்த வீடு எப்படி இருக்கப் போகுதுனு பேசிட்டு இருந்தாங்க. "நரி மாதிரி நடந்துக்கத் தெரியலைனு" ரம்யா சொன்னதா நினைவுபடுத்தறாரு ஆரி. அதை சொல்லும்போதே தன்னைத்தானே ரெபர் செஞ்சு தான் ரம்யா சொன்னாங்க.

வீட்ல பெரியவங்களுக்கு ஒரு குணம் இருக்கும். ஏதோ ஒரு சின்ன விவாதம் நடந்துட்டு இருக்கும். பேசும் போது "முட்டாள்தனமா" பேசாதனு சொல்லிருப்போம். அந்த வார்த்தையை பிடிச்சுக்குவாங்க. "ஆமாண்டா நான் முட்டாள் தான்" னு அங்கேயே நின்னுடுவாங்க. கடைசில என்ன பிரச்சினையை பத்தி பேசினோம்னு மறந்து போய், இந்த வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்த வேண்டியிருக்கும்.

ஆரி தொடர்ந்து அப்படித்தான் நடந்துக்கறாரு. எந்த விவாதம் நடக்கும் போதும் சடார்னு தன்னைத்தானே திட்டிட்டு, எதிர்ல பேசறவங்களுக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கறாரு. நிறைய இடங்கள்ல இதை பண்ணிட்டாரு.

அர்ச்சனா "மானஸ்தன்" அப்படினு ஒரு வார்த்தை சொல்லும் போது, "ஆமா எனக்கு மானமே இல்லைனு" சொல்லிட்டு உக்காந்துட்டாரு. சனம் கிட்ட இதே மாதிரி ஒரு தடவை எரிஞ்சு விழுந்தது நினைவிருக்கலாம்.

நான் இங்க அர்ச்சனா, ரம்யா செஞ்சது சரியா? தவறா?னு பேசலை. ஆரியோட குணம் பத்தி மட்டும் தான் பேசறேன். இதே வார்த்தையை அனிதா, சனம் பார்த்து யாராவது சொல்லிருந்தா அவங்க என்ன சண்டைக்கு போய்ருப்பாங்க. என்னை பார்த்து எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்னு கேட்ருப்பாங்க. ஆனா ஆரி தன்னைத்தானே தாழ்த்திகிட்டு, ஒரு விதமான காம்ப்ளக்ஸ்ல தள்ளிக்கிறாரு. இதை கழிவிரக்கம்னு கூட சொல்லலாம். இந்த வித்திராசத்தை சுட்டிக் காட்டுவது தான் நோக்கம்.

அடுத்து கேட்பரீஸ் சாக்லேட் வழங்கிய ஒரு டாஸ்க்.

ரியோ ஹீரோவா நடிச்ச "ப்ளான் பண்ணி பண்ணனும்" படத்துல இருந்து ஒரு பாட்டு ரிலீஸ் பண்ணினாங்க. யுவன் மியூசிக்ல ரியோ ஹீரோவா நடிச்ச படம். பாட்டு நல்லா இருந்தது.

அந்த பாட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் பேச வந்த பாலா, எல்லார் முன்னாடியும் ஆரி மற்றும் ரியோ கிட்ட மன்னிப்பு கேட்டான். தன்னை விட வயசுல மூத்தவங்களா இருந்தாலும் ரெந்டு பேரையும் பாலா அவமானப்படுத்திருக்கான். ரியோவை நோஸ்கட் செய்யும் போது பாலாவுக்கு வரவேற்பு இருந்தது. ஏன்னா அப்ப ரியோவை யாருக்கும் பிடிக்கலை. ஆனா அதே மாதிரி ஆரிகிட்ட நடந்துகிட்ட போது பாலாவுக்கு நிறைய எதிர்ப்பு வந்தது. ரியோ விலகிப் போனாரு. ஆரி எதிர்த்து நின்னதும் நடந்தது.

இந்த சம்பவத்தை "நடிப்பு" அப்படினு ஒரே வார்த்தைல கடந்து போகறவங்க இருக்காங்க. பிக்பாஸ் வீட்டுல ஒரு சம்பவம் நடக்கும் போது, ஏன்?எதுக்காக? என்ற கேள்விகள் அவசியம். ஒரு கேரக்டர் ஏன் அப்படி நடந்துக்கறாங்க. அதுக்கான அவசியம் என்ன? கோபத்துக்கான, மனமாற்றத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று எழுதுவது தான் ரிவியூ. அது அனுமானமாகவே இருந்தாலும், லாஜிக் காரணங்களோடு இருக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் ப்ரொமோவில் சில நொடிக் காட்சிகள் வரும்போதே மக்கள் ரிவியூ எழுதிவிடுவதால், பெரும்பாலானவர்கள் ஒரு விதமான முன்முடிவோட தான் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.

நேற்றைய பாலாவின் மன்னிப்பும், எதனால் இந்த மனமாற்றம் என்பதற்கான காரணத்தையும் யோசிக்க வேண்டும்.

ஆரி, ரியோ இருவரையும் விட வயதில் குறைந்தவர் பாலா. ஒருவிதமான முரட்டுத்தனமான சூழ்நிலையில் வளர்ந்து, சுயம்புவாக ஜெயித்து நின்றவர். அதனால் யாரையும் மதிக்க வேண்டும் என்றோ, வயதில் மூத்தவர்களுக்கு மரியாத்சி கொடுக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் அவரிடம் இல்லை. சென்ற வாரம் க்ச்மல் சார் சொன்னது போல் டிப்ளமசி என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் வளர்ந்தவராகத் தான் தன்னை இங்கே காட்டிக் கொண்டார் பாலா. இந்த வீட்டில் வந்ததில் இருந்தே அதே "டோண்ட் கேர்" அட்டிட்டியூட் தான் அவரிடம் இருந்தது. யாரை பற்றியும் அவருக்கு கவலை இல்லை. மற்றவர்களை காயப்படுத்துகிறோம் என்ற குற்ற உண்ர்ச்சியும் அவரிடத்தில் இல்லை.

இந்த குணங்களால் அவர் மீது வெளிச்சம் விழுந்தாலும், அது எதிர்மறையான (நெகட்டிவ்) பார்வையாகவே இருந்தது. தொடர்ந்து 3 வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் முரண்டு பிடித்து மொக்கை வாங்கியது, தொடர்ந்த பஞ்சாயத்துகள் இவையெல்லாம் தான் பாலாவை சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு டாஸ்க்கிலும் அவட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் என்பது மட்டும் தான் பாலாவின் ப்ளஸ். அதுவே அவருக்கு கொஞ்சம் மரியாதையை பெற்றுத் தந்தது.

கமல் சாரிடம் தொடர்ந்து கிடைத்த அறிவுரையை ஏற்றுக் கொண்டதில் இருந்து தான் பாலாவிடம் மாற்றம் ஏற்பட்டது. லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் ஒழுக்கமாக இருந்தார். யாரிடமும் தேவையில்லாமல் விவாதம் செய்ய வில்லை. அப்படியான சமயங்களில் கூட தன்னை கட்டுப்படுத்திக் கொண்டார். யாருடைய வம்புக்கும் போகவில்லை. முதல் சில வாரங்களை போல் நேரடியாக ஒருவரின் மீது குற்றச்சாட்டு வைத்து பகைத்துக் கொள்வதையும் தவிர்த்து விட்டார். இதெல்லாம் சேர்ந்து தான் பாலாவிடம் தெரிந்த டிப்ளமேட்டிக் மாற்றங்கள். இந்த அமைதி ஒரு வகையில் பாலாவுக்கு பிடித்திருக்கிறது. பிரச்சினைகளின் நாயகனாக கிடைத்த அடையாளத்தை விட, அவருக்கு கிடைத்திருக்கும் இந்த பாசிட்டிவ் மாற்றங்களை அவர் விரும்புகிறார். தன்னுடைய அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொண்டு மாற்றங்களை காட்டுவதால் தான் கமலுக்கும் பாலாவை பிடித்திருக்கிறது.

அதே சமயம் இந்த மாற்றங்களை கொண்டு வர கடும் முயற்சி எடுத்திருக்கிறார் பாலா. ஒவ்வொன்றையும் ஆழ்ந்து யோசித்து பேசுகிறார். மற்றவர்கள் சண்டையில், பிரச்சினையில் குறுக்கே செல்வதில்லை. இந்த முயற்சிகளே அவருக்கு கடும் சோதனையாக இருக்கிறது. அதன் விளைவு தான் அவர் கன்பெஷன் ரூமில் கண்கலங்கியது. தொடர்ந்து அவர் எடுக்கும் முயற்சிகளை யாரும் பாராட்டவில்லை, ஆனால் அதே சமயத்தில் இன்னுமும் பாலா எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்கிற சந்தேகம், நமக்கு மட்டும்ச்ல்ல, சக ஹவுஸ்மேட்ஸிடமும் இருக்கிறது. அதை பாலாவும் உணர்கிறான். தனது உண்மையான முயற்சிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை பாலாவால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதற்கான அங்கீகாரத்தை அவன் மனது எதிர்பார்க்கிறது. உதாரணமாக சென்ற வார கேப்டன்சி டாஸ்க்கில் அவன் நேர்மையுடன் நடந்து கொண்டது, கமல் சார் ஷோவில் விவாதிக்கப்படவில்லை. பாராட்டும் கிடைக்கவில்லை. அதுபோல் சில உறுத்தல்கள் பாலாவிடம் இருக்கிறது. ஒருவேளை பாலாவின் இந்த முயற்சிகளை யாரும் ஆதரிக்கவில்லை என்று தெரிந்தால், அவன் பழையபடி மாறிவிடவும் வாய்ப்புள்ளது.

நேற்றைய நிகழ்வுக்கு வருவோம். ரியோ ஹீரோவாக நடித்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. உண்மையில் ரியோ ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது நேற்றுத்தான் எனக்கும் தெரிந்தது. என்னைப் போல் பலரும் இருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதே போல் பாலாவுக்கும் நேற்றுத் தான் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.

பாலாவை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான ஆரியும் சில படங்களில் நடித்திருக்கிறார், கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். ரியோவும் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சித் தொகுப்பாளர். இருவருமே மக்கள் அறிமுகம் உள்ளவர்கள்.அப்படிபட்டவர்களை அவமானப்படுத்தியதை நினைத்து வருந்தியிருக்கலாம். தங்களுடைய உழைப்பாலும், திறமையாலும், முயற்சியாலும் பல படிகள் முன்னேறி, உயர்ந்த இடத்தில் இருக்கும் இருவரை, தன்னுடைய திமிரான நடவடிக்கையால் அவமானப்படுத்தியதை உணர்ந்திருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நேற்றைய பாடல் வெளயீடு நடந்த போது தான் பாலாவுக்கு உரைத்திருக்க வேண்டும். அதனால் தான் பாலா இருவரிடமும் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

"அதெப்படி, மத்யானம் வரைக்கும் ஆரியை விமர்சம் செய்வானாம், ராத்திரி மன்னிப்பு கேப்பானாம், இதெல்லாம் நம்பறா மாதிரியா இருக்கு" என்று கேட்பவர்களுக்கு தான் இந்த விளக்கம். அது தான் பாலாவின் அதிரடி. இதை பாலாவை புகழ்வதற்காக சொல்ல வில்லை. அவனது குணமே இதுதான். ஆனா அந்தமடம், இல்லைன்னா சந்தைமடம்ங்கறா மாதிரி. பேச வேண்டும் என்று நினைப்பதை உடனடியாக பேசி விடுவது தான் பாலாவின் குணம். அந்த குணத்தை தான் டிப்ளமசி என்ற கயிறில் கட்டிப் போட்டிருந்தான். நேற்று எதிர்பாராமல் பேசியதால் தான் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இன்னொரு கேள்வி வரும். நேற்று வரை ஆரியை விமர்சித்த பாலா இனிமேல் விமர்சிக்க மாட்டாரா? கண்டிப்பாக விமர்சனம் செய்வான். அவை சமல் சார் சொல்வது போல் ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருக்க வேண்டும். Constructive Criticism என்று கமல் சொன்னதும் இதை தான்.

ஆரி மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்று சொல்வது நிஜம். ஆனால் அதை ஆக்கப்பூர்வமான விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவரை பார்த்து உனக்கு தகுதியில்லை என்று சொல்லும் போது எதிரில் இருப்பவர் காயமடைகிறார். ஆரி அப்படிச் சொல்வதை பாலா சுட்டிக் காட்டுகிறார். ஒருவேளை வரும் வாரத்தில் ஆரிக்கு எதிராக வாதாடவும் செய்யலாம்.

இப்போது பாலா மன்னிப்பு கேட்டது, தனது தவறான செயலுக்காக மட்டுமே. அதன் மூலம் ஆரியும், ரியோவும் அடைந்த அவமானத்திற்கு மட்டுமே. இப்போது மன்னிப்பு கேட்டதால் இருவரையும் விமர்சிக்கவே கூடாது என்பது அர்த்தமல்ல.

இந்த வார கேப்டன்சி டாஸ்க் நடந்தது. வித்தியாசமான டாஸ்க்.

இதில் அர்ச்சனா வெற்றி பெற்றார், ரம்யா இரண்டாவது இடம் பிடித்தார்.

அடுத்த வார கேப்டன் அர்ச்சனா.இந்த வாரம் வெளியேறாமல் இருந்தால் பைனலில் அர்ச்சனா இடம் பெறுவது உறுதி.

கேப்பியின் பர்த்டே கேக் வந்தது. ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே ஜாலியாக கொண்டாடினர். இன்று ஆந்டவர் என்ன சொல்லக் காத்திருக்கிறார் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>