சின்ன குழந்தையாக மாறி மணலில் வீடு கட்டி விளையாடும் அழகி.. வைரலாகும் புகைப்படம்

by Logeswari, Dec 20, 2020, 19:10 PM IST

சாட்டை 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் குடிபெயர்ந்தவர் தான் அதுல்யா ரவி. இவரின் அழகு, ரசனை மிகுந்த நடிப்பு மக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றது. அதுல்யாவின் நடிப்பு திறமை, அழகு ஆகியவை கண்டு பிரமித்து போன இயக்குனர்கள் தானே முன் வந்து தங்களின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்கின்றனர் என்றே கூறலாம். இந்நிலையில் வெளியானது தான் சாட்டை 2, நாடோடிகள் 2 என்ற திரைப்படங்கள்.

இதில் கம்பிரமான ஹீரோயினாக உலா வந்துள்ளார். தற்பொழுது 'முருங்கை சிப்ஸ்' என்ற படத்தில் நடிகர் சாந்தனுவுடன் ஜோடி சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சினிமா உலகில் கவர்ச்சி இல்லை என்றால் படவாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட அதுல்யா சேலை கட்டுவதில் இருந்து கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார். இவரின் அழகுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் அலைமோதிகிறது.

இவர் நிகழ்த்தியுள்ள சில போட்டோ ஷூட்டின் மூலம் இவர் கவர்ச்சி மிகுந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக தெரிவித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நாட்கள் செல்ல செல்ல நடிகைகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கடற்கரையில் சிறு குழந்தை போல் மண்டியிட்டு, வீடு கட்டி மணலில் விளையாடுவது போல சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பதிவிட்டுள்ளார். கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் பலரையும் கவர்ந்து ம் பயங்கர வைரல் எடுக்க தொடங்கியுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை