பொதுவாக நடிகைகளுக்குக் கோவில் கட்டும் இந்தியாவில் நடிகர் ஒருவருக்குக் கோவில் கட்டி இருக்கிறார்கள் ஒரு கிராம மக்கள். அதிலும் அவர்கள் ரசிகப் பெருமக்கள் அல்ல. அந்த நடிகர் செய்த உதவியின் நன்றிக்கடனாக அந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.கொரோனா தொற்று பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டில் ஏராளமான நடுத்தர ஏழை மக்கள் பலர் ஒரு வேளை உணவிற்கே திண்டாடினர் . அவர்களுக்கு அரசு ஒரு பக்கம் பெயரளவுக்கு உதவி செய்து அழிந்துவிட்ட நிலையில் தன்னார்வலர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த உதவியை மக்களுக்குச் செய்து வந்தனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகரான சோனு சூட் 28 மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பெருமளவு உதவிகளைச் செய்திருக்கிறார். இதற்காகத் தனது வருமானம் முழுவதும் மட்டுமல்லாமல் சேமிப்பையும் காலி செய்து விட்ட சொன்னது சோனு சூட் அடுத்து உதவி செய்வதற்காக 10 கோடி ரூபாய்க்குத் தனது சொத்துக்களை அடைமானம் வைத்திருக்கிறார். இந்நிலையில் கொரோனா காலத்தில் உதவிய அவரின் மனிதநேயத்தைப் பாராட்டி தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் சித்திப்பென் மாவட்டம் துப்ப தண்டா என்ற கிராமத்தில் கிராம மக்கள் சோனு சூட்டிற்குக் கோயில் ஒன்றைக் கட்டி இருக்கிறார்கள்.இந்த கோவிலைக் கட்ட அரசு அதிகாரிகள் பலரும் உதவி செய்து இருக்கிறார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.
இந்த கோயில் இன்று கோலாகலமாகத் திறக்கப்பட்டது. அந்த கிராமத்துப் பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.பிறமாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக்கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல சோனு சூட் உதவியுள்ளார்.அது மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புத் தளத்தையும் அமைத்துக்கொடுத்து அந்த கிராம மக்களின் நீங்க இடம் பிடித்துள்ளார். அவரின் மனித நேயத்துக்குக் கிடைத்த பரிசு மற்றும் எங்களது நன்றிக்கடன் தான் இந்த கோயில் என இந்த கிராம மக்கள் நெகிழ்ந்து போய் சொல்கிறார்கள்.சோனு சூட்டின் கோயில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.