பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சித்தூர் ராணி பத்மினியின் கதையை 'பத்மாவதி' என்ற பெயரில் தீபிகா படுகோனே - ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் சர்ச்சைக்கு உள்ளாகி பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.
பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது, சென்சார் போர்டும் அனுமதி மறுத்தது. இதனால் "பத்மாவதி" என்ற படத்தின் பெயரை 'பத்மாவத்' என்றும் காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. பத்மாவத் படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. தடை எதிர்த்து உச்சநீதிமன்ற அனுமதியுடன் படத்தினை ஜனவரி 25 வெளியிட்டனர்.
கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் நல்ல வரவேற்பையும் சுமார் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.
படத்தில் முகலாய மன்னர் அலாதின் கில்ஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரன்வீர் சிங்
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். ராணி பத்மாவதியை அடைந்தாக வேண்டும் என்ற வில்லத்தனமான நடிப்பில் கட்சிதமாக நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் அவரின் நடிப்பிணை பாராட்டி அவருக்கு இன்ப அதிர்ச்சியாக தாதா சாகேப் பால்கே விருது கமிட்டி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. கடிதத்தில், ‘பத்மாவத் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நீங்கள் 2018-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தை படித்த ரன்வீர் பயங்கர குஷியில் உள்ளார். இந்த விருதுக்கு தன்னை தேர்வு செய்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்வதாக ரன்வீர் கூறினார்.