தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93

by Mahadevan CM, Jan 6, 2021, 16:47 PM IST

டிக்கட் டூ பைனல் டாஸ்க் தொடர்கிறது... 3 வது டாஸ்க்காக முதுகில் ஒட்டிய ஸ்டிக்கரை காப்பாற்றிக் கொள்ளும் அதே நேரத்தில் அடுத்தவரிடம் இருந்து பறிக்க வேண்டும்.இந்த டாஸ்க் ஆரம்பித்தவுடன் ஆள் ஆளுக்கு ஒரு மூலையில் போய் நின்று விட்டார்கள். பாயிண்ஸ் டேபிளில் ரியோ டாப்பில் இருப்பதால் அவரை முதலில் டார்கெட் செய்தார் பாலா. அவரும் சீக்கிரமே வெளியேற்றப்பட்டார். ஷிவானியும், கேப்பியும் கடுமையாக மோதினார்கள் இருவருமே விட்டுக் கொடுக்கவில்லை. ஷிவானி தன்னை காயப்படுத்தியதாக கேப்பி குற்றம் சாட்டினார். தனக்கும் அது போல் காயம் ஏற்பட்டிருப்பதாக பிறகு ஷிவானியும் சொல்கிறார். வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் நாமினேஷனில் இந்த பாயிண்ட் வரும்.

ஷிவானியிடம் எடுக்க முடியாததால் கேப்பியின் ஒரு மூலையில் நின்று கொண்டார். சோம் வந்து டார்கெட் செய்து கேப்பியை வெளியேற்றினார். கேப்பியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுத்து ரம்யாவிடம் ஸ்டிக்கரை பறிக்க சோம் முயற்சித்து கொண்டிருந்த போது, சோமை பற்றி கேப்பி ஏதோ சொல்ல, அதை பற்றி கேட்பதற்கு திரும்பினார். அப்போது சோமின் ஸ்டிக்கரை பறித்தார் ரம்யா. இதனால் சோம் கடும் ஆத்திரம் அடைந்தார். கேப்பியிடன் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார்.

இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த போது ஆரி ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். நீச்சல் குளம் அருகில் இருந்த சோபாவில் அவர் அமர்ந்திருந்ததால் பாலா அவரை அங்கிருந்து வெளியே வருமாறு அழைத்தார். ஆனால் ஆரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற அனைவரிடமும் ஸ்டிக்கரை எடுத்து விட்டு வா, நாமிருவரும் விளையாடலாம் என்று பாலாவிடம் சொன்னார்.

அப்படியிருந்தும் பாலா ஒருமுறை ஆரியிடம் சென்று முயற்சி செய்தார்.ஆரி நீச்சல் குளத்தை சுற்றி ஓடி மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார். ஷிவானியிடம் மட்டும் சென்று டிக்கரை பிடுங்க முயற்சித்தார். ஆரி அந்த இடத்தை விட்டு வெளியே வர மறுத்ததால், நீச்சல் குளத்தை சுற்றி ஓடுவதை தடுக்கும் பொருட்டு இரண்டு நாற்காலிகளை எடுத்து வந்து குளத்தைச் சுற்றி ஓட முடியாத வகையில் போட்டு வைத்தார். அதற்கு ஆரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அந்த இடத்தை தாண்டும் போது விழுவதற்கு வாய்ப்புள்ளது என்று சொன்னார். பாலாவினுடைய வாதமும் அதுதான். நீச்சல் குளத்தை சுற்றி ஓடினால் விழுவதற்கு வாய்ப்புள்ளது என்பது பாலாவினுடைய வாதம். பாலாவின் ஸ்ட்ராட்டஜியை கண்டித்த ஆரி, ஸ்டிக்கரை எடுத்துக் கொள்ளும்படி திரும்பி நின்றார். பாலாவும் எடுத்து வந்துவிட்டார்.

அதன் பிறகு ஓடி வந்து விளையாடுவதில் என்ன பிரச்சினை என்று விவாதம் தொடங்கியது. புல்வெளி இருக்கும் இடத்தில் ஓடி விளையாடலாம் என்பது பாலாவின் பதில். பேசிக் கொண்டிருக்கும் போதே "நீ ஆம்பிளைப்பையன் தானே" ஓடி வந்து விளையாட மாட்டியா? என்று வார்த்தை விட்டார் ஆரி. அருகில் இருந்த ரியோவும் அதற்கு அதிருப்தி அடைந்தாலும் யாரும் கண்டிக்கவில்லை. பாலாவின் கண்ட்ச்னத்துக்கு பிறகும் ஆரி தொடர்ந்து தன் கருத்தை பேசிக் கொண்டிருந்தார்.

ஆரியிடம் எடுத்ததற்கு பிறகு ரம்யா, ஷிவானியிடம் எடுத்து வெற்றி பெற்றார் பாலா.வீட்டிற்குள் வந்து கேமரா முன் நின்று ஆரி சொன்ன வார்த்தையை பற்றி புலம்பினார் பாலா.வீக்கான போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு வா, நாம் இருவரும் விளையாடலாம் என்று பாலாவை அழைத்திருன்ரார் ஆரி. பாலாவை பொறுத்தவரை முதலில் ரியோவிற்கு பிறகு அவர் ஆரியை தான் அழைத்தார். பெண்களிடம் செல்லவில்லை. சோம் மட்டுமே பெண்களுடன் விளையாடினார். மற்றவர்கள் அவுட் ஆனவுடன் பாலாவுடன் விளையாடுகிறேன் என்று ஆரி எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தார். அப்படி இருந்துவிட்டு போட்டி முடிந்த பிறகு ஷிவானி அதிக பாயிண்ட் எடுக்க வேண்டும் என்று தன்னை டார்கெட் செய்ததாக பாலா மீது குற்றம் சாட்டினார்.

ஒருவேளை இது தான் பாலாவுடைய ஸ்ட்ராட்டஜி என்று தெரிந்தால் இவரே சென்று ஷிவானியை வெளியேற்றி இருக்கலாம். ஒருமுறை முயற்சித்ததை தவிர ஆரி எதுவும் செய்யவில்லை. மற்ற அனைவரையும் பாலா தோற்கடித்த பிறகு விளையாட வருவேன் என்று சொல்வது நியாயமில்லை. ஷிவானியை தவிர வேறு யாருடனும் விளையாட முயற்சிக்க வில்லை. மற்ற அனைவருடனும் விளையாடி முடித்தால் டயர்ட் ஆகி விடுவோம் என்பது பாலாவின் லாஜிக். எனவே முழு சக்தி இருக்கும் போது வலிமையான போட்டியாளரை எதிர் கொள்ளலாம் என்றுவாதம் செய்தார். இந்த பாயிண்ட் நாமினேஷனில் வரும் கண்டிப்பாக.

அடுத்த டாஸ்க் இசையை கேட்டு பஸ்ஸரை அடிப்பவர்கள் பாடலின் ஆரம்பத்தை தவறில்லாமல் பாட வேண்டும். பஸ்ஸரை அடிப்பதற்கே எல்லாரும் அடித்துக் கொண்டார்கள். இதில் பாலா செய்தது அராஜகம். பஸ்ஸருக்கு மிக அருகில் இருந்து கொண்டு பாடல் ஒலித்தவுடன் பஸ்ஸரை அடிக்கிறேன் பேர்வழி என்று மற்றவரை மோதி கீழே தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தான். முதலில் கேப்பி கீழே விழுந்தார். முதலில் பஸ்ஸரை தொட்ட பாலாவுக்கு பாடல் தெரிந்தாலும் பரவாயில்லை. அதுவும் அவருக்கு தெரியவில்லை. ஷிவானி, கேப்பி இருவருக்கும் தான் நிறைய பாடல்கள் தெரிந்திருந்தது. மற்றவர்களுடைய வாய்ப்பையும் சேர்த்து வீணாக்கினார் பாலா. இந்த காரணத்திற்கு தாராளமாக வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் கொடுக்கலாம். லாரி வராமல் இருந்தால் போதுமென்று ரம்யா கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

ஆரிக்கும் எந்த பாடலும் தெரியவில்லை. சோம், ரியோ இருவரும் தவறு செய்தனர். இறுதியில் பாலா கடைசி இடம் பிடித்தார். ஷிவானி முதல் இடம் பிடித்தார்.

நேற்றைய போட்டிகளின் முடிவில் ரம்யா முதல் இடத்தில் இருக்கிறார். இன்னும் கடினமான போட்டிகள் வர வேண்டும்.

You'r reading தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை