தமிழகத்தில் முழுமையாக நிரம்பிய ஏரிகள்...!

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் 4, 266 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

by Balaji, Jan 6, 2021, 16:24 PM IST

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவை விட அதிகளவில் பெய்திருக்கிறது. இதன் காரணமாக ஏரி குளம் போன்ற நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதேபோல் 698 ஏரிகள் 91 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி வருகின்றன. 843 ஏரிகள் 81 முதல் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. 1,346 ஏரிகள் 71 முதல் 80 சதவீதம் நீர் வந்து உள்ளது.அதே நேரம் 438 ஏரிகளுக்கு இதுவரை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விடாமல் வறண்டு கிடக்கிறது என்றும் ஒரு கணக்கீடு மூலம் தெரியவந்துள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை