சகாயம் ரிட்டஅர்யர்டு : அடுத்தது கட்சி தானா?

தமிழகத்தில் லஞ்சத்தை எதிர்த்துப் பெயர் பெற்ற ஐஏஎஸ் சகாயம் இன்று முதல் அதிகாரி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இனி அவர் அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

by Balaji, Jan 6, 2021, 16:52 PM IST

சகாயம் ஐஏஎஸ் ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான இந்த பெயர் இவரது நேர்மைக்குக் கிடைத்த சான்றாக இருந்தது. நாமக்கல் மற்றும் மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்து எல்லோரும் எளிதில் நடக்கக் கூடிய அதிகாரியாக இருந்து பெயர் பெற்றவர் அதன்பின் ஆட்சியராக நியமிக்கப்படவில்லை ஊழலை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துறைகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

கடந்த 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்ற சகாயம் . புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோதுதான் கிரானைட் ஊழலை அம்பலப்படுத்தினார். தற்போது கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அறிவியல் நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார்.

இவர் இவர் இன்னும் 3 ஆண்டுகள் கழித்து அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் 57 வயதிலேயே விருப்ப ஓய்வு கேட்டுக் கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தார். விருப்ப ஓய்வு அளிப்பதற்கு வேண்டிய கால அவகாசமான மூன்று மாதங்கள் கடந்து விட்டதால் தமிழக அரசு இன்று முதல் அவரை பணியில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையும் ஆற்றி வந்துள்ளார். இந்த அமைப்பு மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு லஞ்சத்துக்கு எதிரான மறைமுகப் போரை நடத்தி வந்தார். தற்பொழுது தமிழகத்தில் தேர்தல் வரக் கூடிய காலம் என்பதால் இவரது அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை