பொங்கல் விருந்துக்கு தயாரா?? மாஸ் திரைப்படங்களை களம் இறக்கும் சன் தொலைக்காட்சி.. மூன்று நாளும் செம என்ஜோய்மேன்ட் தான் போங்க..

by Logeswari, Jan 13, 2021, 13:09 PM IST

தமிழர்கள் தை மாதத்தை மிக சிறப்பாக வரவேற்ப்பார்கள். ஏனென்றால் நமது விவசாயிகள் ஆறு மாதமாக கடினப்பட்டு விதைத்ததை அறுவடை செய்யும் நாள் தான் தை முதலாம் நாள். மக்கள் பொங்கலை மூன்று நாட்களுக்கு செம கலக்கலாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் தொலைக்காட்சிகளும் பொங்கல் திருநாளன்று மாஸ் படங்களை இறக்க முழு மூச்சாய் செயல்பட்டு வருகின்றது. ஆங்கில புத்தாண்டை மிக விமர்சியாக வரவேற்த்த சன் தொலைக்காட்சி இப்பொழுது பொங்கலை குறி வைத்துள்ளது.

பக்கா பேமிலி படத்தை பொங்கல் விருந்தாக கொடுக்க முடிவெடுத்துள்ளது. ஒரு நாளல்ல.. இரண்டு நாளல்ல.. மொத்தம் மூன்று நாட்களும் புதிய புதிய படத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. பல சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்ட ஸ்பெஷல் ஷோவும் கைவசத்தில் உள்ளது. சரி வாங்க என்னென்ன திரைப்படங்கள் என்பதை பார்க்கலாம். தை பொங்கல் முதலாம் நாளில் 11 மணிக்கு தனுஷ் நடித்த பட்டாஸ், 3 மணிக்கு கருப்பு சிங்கம் விஷால் நடித்த பூஜை, 6.30 மணியளவில் ஓடிடியில் வெளியாகி பல வெற்றிகளை குவித்த சுரரைப்போற்று திரைப்படம் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இரண்டாவது நாளான மாட்டு பொங்கல் தினத்தன்று 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட, 3 மணிக்கு தளபதி நடித்த வேட்டைக்காரன், 6.30 மணியளவில் புலிக்குத்தி பாண்டி போன்றவை திரையிடப்படுகிறது. கடைசி நாளான காணும் பொங்கல் அன்று 9.30 மணிக்கு ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி, 3 மணிக்கு நட்பே துணை மற்றும் 6.30 மணிக்கு ராகவாலாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஆகவே எந்த திரைப்படத்தையும் தவறவிடாமல் மகிழ்ச்சியாக கண்டுகளியுங்கள்.You'r reading பொங்கல் விருந்துக்கு தயாரா?? மாஸ் திரைப்படங்களை களம் இறக்கும் சன் தொலைக்காட்சி.. மூன்று நாளும் செம என்ஜோய்மேன்ட் தான் போங்க.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை