கொடிவீரன் ரிலீஸ் தேதி மாற்றம்

by Nabil, Nov 28, 2017, 11:23 AM IST

குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா – சசிகுமார் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’.

கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அசோக் குமார் தற்கொலையால் கொடிவீரன் வருமா? வராதா? என்ற நிலைதான் இருந்தது

இப்படத்தில்  மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் முக்கியமான வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

படம் நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கொடிவீரன் ரிலீஸ் தேதி மாற்றம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை