தெய்வத்தின் சொந்த நாடாக கருதப்படும் கேரளாவை நான் காதலிக்கிறேன் என்று பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் அவர் எடுத்த கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் மம்மூட்டியுடன் மதுர ராஜா என்ற படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடினார். இதன் பின்னர் கேரளாவில் அவருக்கு ரசிகர்கள் மேலும் அதிகரித்துள்ளனர். இதனால் கேரளாவில் சமீபகாலமாக பல நிறுவனங்களின் திறப்பு விழாக்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார். சன்னி லியோன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் திரள்வதால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் தங்கியுள்ளார். ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காகவும் இவர் வந்துள்ளார்.இதற்கிடையே ஒரு நிறுவனத்தின் காதலர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றியதாக அவர் மீது ஒரு புகார் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் இரண்டு முறை விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையோரம் எடுக்கப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெய்வத்தின் சொந்த நாடு என கூறப்படும் கேரளாவை நான் காதலிக்கிறேன் என்று ஒரு வாசகத்தையும் சன்னி லியோன் அந்த புகைப்படங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் கேரள பாரம்பரிய உடையுடன் அவர் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இவையும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.