கிளைமாக்ஸ், டிவிஸ்ட் சூப்பர் திரிஷ்யம் 2வை பாராட்டும் கிரிக்கெட் வீரர் அஷ்வின்

Advertisement

மோகன்லால் நடித்த திரிஷ்யம் 2 படத்தைப் பார்த்தேன். மிக அருமையான படம், அற்புதமான டிவிஸ்ட், நம்பமுடியாத கிளைமாக்ஸ் ஜார்ஜ் குட்டியாக வாழ்ந்துள்ள மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள் என்று பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் 2 படம் கடந்த சில தினங்களுக்கு முன் அமேசான் பிரைமில் வெளியானது. திரிஷ்யத்தின் முதல் பாகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கினார்.

மலையாள சினிமாவில் பல வசூல் சாதனைகளை முறியடித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் சிங்களம், சீனா உள்பட வெளிநாட்டு மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் ஆனது. இந்நிலையில் முதல் பாகம் வெளியாகி 7 வருடங்களுக்குப் பின்னர் 2வது பாகத்தை இயக்க ஜீத்து ஜோசப் தீர்மானித்தார். இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத், அன்சிபா கான் உட்பட முக்கிய நடிகர்கள் இந்தப் படத்திலும் நடித்தனர். இந்த படத்தில் போலீஸ் ஐஜி வேடத்தில் முரளி கோபி நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் படமும் முதல் பாகத்தைப் போலவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி தள்ளுகின்றனர். இதில் மோகன்லாலின் நடிப்பு மிக அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பல சாதனைகளை முறியடிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படமும் பல மொழிகளில் ரீமேக் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தைப் பார்த்த பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் மிகுந்த பாராட்டு தெரிவித்துள்ளார்.

மோகன்லால் மீனா நடித்த திரிஷ்யம் 2 படத்தை பார்த்து அசந்து விட்டேன். படத்தின் கிளைமாக்ஸ் பலராலும் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. அது யாராலும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் ஆகும். நீதிமன்றத்தில் வரும் கிளைமாக்ஸ் சீனை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் முதல் பாகத்தை முதலில் பார்த்து விட்டு 2வது பாகத்தை பாருங்கள். மிகச்சிறந்த படம், ஜார்ஜ் குட்டியாக மோகன்லால் வாழ்ந்துள்ளார் என்று அஷ்வின் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>