மலேசியாவில் ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய்

Advertisement

 நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும் முதல்வேலையாக சங்கக் கட்டடம் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு ஸ்டார் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தி நிதி திரட்டினர். அது போதிய வரவேற்பை பெறவில்லை அதனால் இன்னும் நிதி தேவைப்படுவதால்  மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த உள்ளனர். 

2018 ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்துகொள்கிறார்கள் 

கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. 

இதுகுறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரி கூறியதாவது...

“மலேசியாவில் தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்காக ஒவ்வொரு நட்சத்திரங்களையும் நேரிலும் அலைபேசியிலும் பேசி தகவல் தெரிவித்து வருகிறோம். முதல்கட்டமாக நானும், கார்த்தியும் சேர்ந்து ரஜினி சாரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தோம். ‘மலேசிய கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைத்தோம். 'நான் நிச்சயம் வர்றேன்...' என்று உடனடியாக ஒப்புக்கொண்டார். 

முதலில் கிரிக்கெட் போட்டி. இதில் ஆர்யா, அதர்வா, விக்ராந்த், ஜீவா, விஷ்ணு விஷால்... போன்ற திறமையாக கிரிக்கெட் ஆடும் இளம் நடிகர்கள் விளையாடுகிறார்கள். அதன்பின் நடக்கும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டியிலும் திரைப்பட நட்சத்திரங்களே பங்கேற்கிறார்கள். ஜனவரி 6-ம்தேதி மதியம் 12 மணிக்கு நட்சத்திர விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தப் போட்டிகள் முடிந்தவுடன் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மேடையில் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அப்போது ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடத்தப்படும் இந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் ஏற்பாடு செய்வதிலும் மற்றவர்களைப்போல எனக்கும் பெருமகிழ்ச்சியே!”

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>