ஷங்கர் - ஜீனியஸ், விக்ரம் - திறைமையாளர்... ரன்வீர் சிங் ஓபன் டாக்!

Advertisement

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனரான ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியது. இதில் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக பாலிவுட் படம் ஒன்றை ஷங்கர் முதல் முறையாக இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தமுறை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்துள்ளார் ஷங்கர். வழக்கமாக அவரின் படத்தை பாலிவுட்டில் வேறு யாராவது ரீமேக் செய்வார்கள். ஆனால் இந்த முறை அவரே ரீமேக் செய்கிறார். ஆம், அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர் அதில் தான் ரன்வீர் சிங் ஹீரோவாக விக்ரம் ரோலில் நடிக்கிறார்.

பிரமாண்டமாக உருவாக இருக்கும் ஷங்கர் படத்தை பென் ஸ்டூடியோஸ் டாக்டர் ஜெயந்திலால் கடா, காட் ப்ளஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 மத்திய பகுதியில் படம் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் விரைவில் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, ஷங்கருடன் இணைவது தொடர்பாக ரன்வீர் சிங் பேட்டியளித்துள்ளார். அதில், `` இயக்குநர் ஷங்கர் ஒரு ஜீனியஸ். அவரின் அற்புதமான சினிமா உலகில் நானும் இணைத்திருப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். திரையில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை உணர்த்திய மனிதர் ஷங்கர். நிச்சயம், எங்கள் கூட்டணி ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தும்.

நான் மிகவும் மதிக்கும் நடிகர் விக்ரம். நாட்டில் உள்ள மிகச் சிறந்த திறமையாளர்களில் விக்ரும் ஒருவர். 'அந்நியன்' படத்தில் மிகச் சிறந்த நடிப்பை விக்ரம் வெளிப்படுத்தியிருப்பதை போலவே என்னுடைய நடிப்பும் அதே வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும். இப்போது, எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை'' என்று பேசியிருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>